ஜெ. பிரான்சிஸ் கிருபா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜெ. பிரான்சிஸ் கிருபா
ஜெ. பிரான்சிஸ் கிருபா
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஜெ. பிரான்சிஸ் கிருபா
பிறந்ததிகதி 1974 - 16 செப்டம்பர்
இறப்பு 2021
அறியப்படுவது எழுத்தாளர்

ஜெ. பிரான்சிஸ் கிருபா (1974 - 16 செப்டம்பர், 2021) ஒரு தமிழ்நாட்டுப் புதுக்கவிதை எழுத்தாளர் ஆவார்.

தொடக்க வாழ்க்கை

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த பத்தினிப்பாறை என்னும் சிற்றூரில் 1974-இல் பிறந்த பிரான்சிஸ் கிருபா, பள்ளிப்படிப்புடன் கல்வியை நிறுத்திக்கொண்டார்.

படைப்புகள்

எட்டு கவிதைத் தொகுப்புகளையும் கன்னி என்ற புதினத்தையும் இயற்றியுள்ளார். காமராஜ் (2004) திரைக்கதைக்கும் தேவதேவன் பற்றிய குறும்படத்துக்கும் பங்களித்துள்ளார்.[1]

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
2003 மெசியாவின் காயங்கள் கவிதைத் தொகுப்பு
2005 நிழலன்றி ஏதுமற்றவன்
2006 கன்னி புதினம்
2008 மல்லிகைக் கிழமைகள் கவிதைத் தொகுப்பு
2009 (?) வலியோடு முறியும் மின்னல் தமிழினி பதிப்பகம்
2012 ஏழுவால் நட்சத்திரம்
2016 சம்மனசுக் காடு
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
2019 சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் படிகம் வெளியீடு

விருதுகள்

ஆண்டு விருது வழங்கியவர் / அமைப்பு குறிப்பு
2007 சிறந்த புதினம் ஆனந்த விகடன் கன்னி புதினத்துக்காக
2008 சுந்தர ராமசாமி விருது நெய்தல் இலக்கிய அமைப்பு கவிதைகளுக்காக
2017 சுஜாதா அறக்கட்டளை விருது[2] சுஜாதா அறக்கட்டளை சம்மனசுக்காடு தொகுப்புக்காக
? மீரா விருது மெசியாவின் காயங்கள் தொகுப்புக்காக[1]

மறைவு

இவர் 16 செப்டம்பர் 2021 அன்று காலமானார்.[3] அவர் உடல் பத்தினிப்பாறையில் அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 #மல்லிகைக் #கிழமைகள் (#கவிதைத் #தொகுப்பு) - #கவிஞர் #ஜெ. #பிரான்சிஸ் #கிருபா., பார்க்கப்பட்ட நாள் 2022-10-27
  2. "விடுபூக்கள்: சுஜாதா விருதுகள் 2017". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 17 மே 2019.
  3. "'இருள் என்பது கறுப்பு வெயில்' - கவிஞர் பிரான்சிஸ் கிருபா மரணம் - ETV Bharat". 17 செப்டம்பர் 2021.

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=ஜெ._பிரான்சிஸ்_கிருபா&oldid=5934" இருந்து மீள்விக்கப்பட்டது