ஜெ. வீரநாதன்
Jump to navigation
Jump to search
ஜெ. வீரநாதன் (பிறப்பு: ஜனவரி 14, 1960) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூரில் வசித்து வரும் இவர் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும் பெற்றிருக்கிறார். அச்சுத்துறையில் செயல்முறைப் பட்டறிவுடைய இவர் தற்போது கணினி வரைகலையில் பயிற்சியளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரி - பிரஸ் ஒரு அறிமுகம், பேஜ் மேக்கர், இண்டர்நெட் - ஒரு சிறு அறிமுகம், விசிட்டிங் கார்டு 1000 போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "சித்திரமும் மவுஸ் பழக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.