ஜேமி லீவர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சேமி லீவர்
Jamie Lever
2017 ஆம் ஆண்டு சேமி லீவர்
பிறப்பு19 அக்டோபர் 1987 (1987-10-19) (அகவை 38) [1]
மும்பை
மகாராட்டிரம்
இந்தியா
கல்விவெசுட்மின்சுடர் பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போதுவரை
அறியப்படுவது
  • கிசு கிசுகோ பியார் கரூன்?
  • காமெடி சர்க்கசுக்கி மகாபலி
பெற்றோர்ஜானி லீவர்
சுசாதா சானி லீவர்
உறவினர்கள்

சேமி லீவர் (ஆங்கிலம்:Jamie Lever) என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் நகைச்சுவை நடிகையாவார்.[1] இவர் இந்தித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றுகின்றார். மேலும் இவர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இந்தித் திரையுலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் மற்றும் மேடைநகைச்சுவை நடிகரான ஜானி லீவர் அவர்களின் மகளாவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

சேமி லீவர் என்பவர் நகைச்சுவை நடிகரான ஜானி லீவர் மற்றும் சுசாதா சனுமாலா ஆகியோரின் மகளாவார். இவருக்கு ஜெசி என்ற தம்பி உள்ளார். சேமி லீவர் இலண்டனில் அமைந்துள்ள வெசுட்மின்சுடர் பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் தொடர்புகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். சேமிலீவர் தனது தொழில் வாழ்க்கையை 2012 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இலண்டனைத் தலைமையாகக் கொண்ட சந்தை ஆராய்ச்சி நிறுவனமான விஷன்கெயினில் ஒரு சந்தைப்படுத்தல் அதிகாரியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல், மும்பையில் தி காமெடி இசுடோரில் ஒரு மேடைச் சிரிப்புரை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். 2013 ஆம் ஆண்டில் சோனி எண்டர்டெய்ன்மெண்ட் டெலிவிசனில் ஒளிபரப்பான காமெடி சர்கஸ் கிய் மகாபலி என்னும் நிகழ்ச்சியில் தோன்றினார். மேலும் சேமிலீவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.[3]

திரைப்படப் பட்டியல்கள்

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2015 கிசு கிசுகோ பியார் கரூன்? சம்பா இந்தி அறிமுகம்
2019 ஹவுஸ்ஃபுல் 4 கிக்லி இந்தி
2021 பூத் போலீஸ் லதா இந்தி டிசுனி பிளசு காட்சுடார் திரைப்படம்
2023 யாத்ரிசு இந்தி
2024 கிராக் சுனைடா இந்தி
ஆ ஒக்கட்டி அடக்கு தேவி தெலுங்கு தெலுங்கு மொழியில் அறிமுகம்

வலைத் தொடர்கள்

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2023 பாப் கோன்? இராணி ஹாட் ஸ்டார்

பாடல் தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பாடகர் சிட்டை மேற்கோள்.
2021 கின்னி கின்னி வாரி ராசி சூட் பிக் பேங் மியூசிக் [4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "சேமி லீவர் பிறப்பு மற்றும் வாழ்க்கை". Forward Press (in அமெரிக்க ஆங்கிலம்). 1 February 2025. Retrieved 31 March 2021.
  2. "The Heir Is on Air". Open The Magazine. Open Media Network Pvt. Ltd. 21 September 2013. Retrieved 23 August 2014.
  3. "Jamie performs in front of father Johnny Lever". http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/tv/news/Jamie-performs-in-front-of-father-Johnny-Lever/articleshow/23813346.cms. பார்த்த நாள்: 23 August 2014. 
  4. "Jamie Lever, Krishna Shroff, Jannat Zubair feature in 'Kinni Kinni Vaari' song". ஏஎன்ஐ செய்தி News (in ஆங்கிலம்). Retrieved 2021-07-02.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜேமி_லீவர்&oldid=380892" இலிருந்து மீள்விக்கப்பட்டது