டி. கே. ஹம்சா
டி. கே. ஹம்சா | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
| பதவியில் 2004–2009 | |
| முன்னையவர் | ஈ. அகமது |
| பின்னவர் | ஈ. அகமது (மலப்புறம்) |
| தொகுதி | மஞ்சேரி |
| பேப்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1987–2001 | |
| முன்னையவர் | கே. மூசக்குட்டி |
| பின்னவர் | வி. கே. சி. மம்மெத் கோயா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 14 சூலை 1937 வண்டூர், கேரளம் |
| அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
| துணைவர் | மைமூனா கே. |
| பிள்ளைகள் | நஜிப், ரபிக், சபீர், நதீரா, சாரா |
| வாழிடம் | மஞ்சேரி, மலப்புறம் |
| இணையத்தளம் | http://tkhamza.com/ |
23 September, 2006 மூலம்: [1] | |
டி. கே. ஹம்சா (T. K. Hamza) (பிறப்பு 14 ஜூலை 1937) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். கேரள மாநிலத்தின் வண்டூர் ஊராட்சியில் உள்ள கூரத்தில் பிறந்தவர். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலையும்,எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றார். 1968ல் மஞ்சேரி வழக்குரைஞர் கழகத்தில் சேர்ந்தார். 1987 முதல் 1991 வரை 8வது கேரள சட்டமன்றத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இவர் கேரளாவின் மஞ்சேரி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[1]இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். தற்போது கேரளாவின் வக்பு வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.[2]
வகித்த பதவிகள்
02-04-1987 முதல் 17-06-1991 வரை பணிகள், வக்பு, ஹஜ் மற்றும் உள்நாட்டு வழிசெலுத்தல் அமைச்சராக இருந்தார். 2004-2009 வரை பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தார். பொதுக் கணக்குக் குழு (1991–93), சலுகைகள் குழு (1996–98), & (1998-01) ஆகியவற்றின் தலைவராக இருந்தார்.
1996-2001 வரை அரசு தலைமைக் கொறடாவாகவும்; காங்கிரசின் கோழிக்கோடு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும்; மலப்புறம் மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.[3] 1957 இல் அகில இந்திய காங்கிரசு கடசியில் சேர்ந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசிலும் பணியாற்றினார்; 1984 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யில் இணைந்து தற்போது கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருக்கிறார்.