தண்ணீர் தேசம்
Jump to navigation
Jump to search
| தண்ணீர் தேசம் | |
|---|---|
![]() | |
| நூல் பெயர்: | தண்ணீர் தேசம் |
| ஆசிரியர்(கள்): | வைரமுத்து |
| வகை: | கவிதை நாவல் |
| மொழி: | தமிழ் |
| பொருள்: | அறிவியல் உண்மைகள் |
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996-இல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப்பட்டுள்ளன.
இக்கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்காரக் குடும்பத்துப் பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
