தபி மாவட்டம்
Jump to navigation
Jump to search
தபி மாவட்டம் | |
|---|---|
மாவட்டம் | |
குஜராத் மாநிலத்தில் தபி மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | குஜராத் |
| நிறுவிய ஆண்டு | 27 செப்டம்பர் 2007 |
| தோற்றுவித்தவர் | குஜராத் அரசு |
| தலைமையிடம் | வியாரா |
| அரசு | |
| • நிர்வாகம் | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 8,07,022 |
| மொழிகள் | |
| • அலுவல் | குஜராத்தி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 394650 |
| வாகனப் பதிவு | GJ 26 |
| இணையதளம் | https://tapi.nic.in |

தபி மாவட்டம் (Tapi district) (குசராத்தி: તાપી જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தலைமையிடம் வியாரா நகரம். இம்மாவட்டம் 3239 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டம் அடர்ந்த மூங்கில் மரக்காடுகளை உடையது.
வரலாறு
சூரத் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 27 செப்டம்பர் 2007-இல் தபி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டம் குஜராத் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
வருவாய் வட்டங்கள்
- வலோத்
- வியாரா
- சன்காத்
- உச்சால்
- நிசார்
மக்கள் வகைப்பாடுகள்
2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 806,489 ஆகும்.[1] .மாவட்ட மக்கட்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 234 நபர்களாக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1004 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 69.23% ஆக உள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.