தமிழில் திரட்டு நூல்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழர் தமிழ் இலக்கியப் பாடல்களை ஏட்டில் எழுதிப் பாதுகாத்துவந்தனர். அவற்றின் எண்ணிக்கை பல்கிவிட்டமையால் பாராயணம் செய்ய அவ்வப்போது அவரவர் விருப்பத்துக்கேற்ப, சிலபல பாடல்களைத் திரட்டித் தொகுத்துத் தனி நூலாகச் செய்துகொண்டனர். இப்படித் தோன்றியவையே திரட்டு நூல்கள் .

சங்ககாலத்தில்

சங்ககாலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்) அவ்வப்போது ஆங்காங்கே புலவர்கள் பாடிய பாடல்கள் எட்டுத்தொகை என்னும் பெயரிலும், பத்துபாட்டு என்னும் பெயரிலும் ஏழாம் நூற்றாண்டில் திரட்டப்பட்டுள்ளன.

பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்புப் பாடலும் 'நானாற்பது' என்னும் பெயரில் நான்கு நூல்களையும், 'ஐந்திணை' என்னும் பெயரில் ஐந்து நூல்களையும் திரட்டிக் காட்டியுள்ளது.

முத்தொள்ளாயிரம் நூலிலுள்ள பாடல்களும் திரட்டப்பட்டனவே.

இவை மிகப் பழங்காலத் திரட்டு நூல்கள்.

காலப்பாதையில் திரட்டு நூல்கள்