தருமை ஆதீனம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தருமபுரம் ஆதீனம்
படிமம்:Dharmapuram Adheenam.jpg
தலைமையிடம், மயிலாடுதுறை
நிறுவனர் குருஞானசம்பந்தர்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் http://www.dharmapuramadheenam.org/


தருமபுரம் ஆதீனம் அல்லது தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இம்மடம் அமைந்துள்ளது. 1987-இல் சுமார் 27 சிவாலயங்கள் இதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.[1]

இந்த மடம் குருஞான சம்பந்தரால் துவங்கப்பட்டது.

இவ்வாதீனம் சமயம் சார்ந்த பணிகளோடு, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் அமைத்தும், சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை(அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்) போன்ற பொது நிறுவனங்களுக்குப் பெருந்தொகை வழங்கியும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவி புரிந்தும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. ஞானசம்பந்தம் என்ற திங்கள் இதழையும் இந்த மடம் வெளியிடுகிறது[2]

கோவில்கள்

தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் சமயக்குறவர் மூவரால் பாடப்பெற்ற பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் இடம்பெற்றவை

பாடல் பெற்ற ஸ்தலங்கள்

மயிலாடுதுறை மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
  • கைலாசநாதர் ஆலயம், கிடாரம்கொண்டான், திருவாரூர் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி மாநிலம்

ஏனைய தலங்கள்

கட்டளைகள்

  • திருவாரூர் தியாகராஜர் கோவில் - இராஜன் கட்டளை
  • மயிலாடுதுறை - குமரக்கட்டளை
  • திருவிடைமருதூர் - பிச்சக்கட்டளை

கிளை மடம்

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தெற்கு வீதியில் அமைத்துள்ள மவுன மடம் தருமை ஆதீனத்தின் கிளை மடமாகும். தாயுமானவர் கோவிலுக்குரிய பல கட்டளைகள் மவுன மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அவை மவுன மட கட்டளை என்று அழைக்கப்படுகிறது

ஆதீனங்கள் பட்டியல்

ஆதீன நிறுவனர் குருஞான சம்பந்தருடன் சேர்த்து இதுவரை 27 பேர் ஆதீனத்தின் தலைமை பொறுப்பை அலங்கரித்துள்ளனர். அவர்களின் பட்டியல் கீழே

படிமம்:DHARUMAI ADHEENAM 27TH GURUMAHA SANNITHANAM.jpg
தற்போதைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
தருமபுரம் ஆதீன குருமரபு அட்டவணை
எண் பெயர் குறிப்பு
1 ஸ்ரீ குருஞானசம்பந்த குருமூர்த்திகள் ஆதீன நிறுவனர்
2 ஸ்ரீலஸ்ரீ ஆனந்தபரவச தேசிகர் குருஞானசம்பந்த ஸ்வாமிகள் முக்திக்கு பின் இரண்டாவதாக தலைமை பொறுப்பேற்ற இவர், தலைமை ஏற்ற அன்றே முக்தி பெற்றார்
3 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
4 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் பெருந் தமிழ்ப் புலவரான குமரகுருபரர் இவரது சீடர் ஆவார். இவரது கட்டளைப்படியே குமரகுருபரர் காசிக்கு சென்று குமாரசாமி மடத்தை நிறுவினார். பின்னாளில் அதன் தலைமையிடம் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பட்டு திருப்பனந்தாள் காசிமடமாக என்ற பெயரில் செயல்படுகிறது. இவர் மேல் கொண்ட பக்தியால் பண்டார மும்மணி கோவை என்றொரு மும்மணி கோவையை குமரகுருபரர் இயற்றினார்.

முதுமொழிமேல் வைப்பு நூலின் ஆசிரியர் வெள்ளியம்பலவாண முனிவரும் இவரது மாணாக்கரே

5 ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
6 ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தேசிகர்
7 ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிகர்
8 ஸ்ரீலஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்
9 ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகர் சித்தாந்த நிச்சயம் என்றொரு சரித்திர நூல் இவர்களால் இயற்றப்பட்டது
10 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
11 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
12 ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தேசிகர்
13 ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர்
14 ஸ்ரீலஸ்ரீ கந்தப்ப தேசிகர்
15 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர்
16 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
17 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
18 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
19 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
20 ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிகர்
21 ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த தேசிகர்
22 ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர்
23 ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 30-10-1923 முதல் 26.06.1933 வரை
24 ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகர் இவரது ஆட்சிக்காலத்தில் சிவாகம பாடசாலை, தேவார பாடசாலை, குருஞானசம்பந்தர் துவக்கப்பள்ளி, ஞானசம்பந்தம் மாத இதழ் முதலியன துவங்கப்பட்டன. காலம் - 26.06.1933 முதல் 20.05.1945 வரை
25 ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் காலம் - 20.05.1945 முதல் 10.11.1971 வரை
26 ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் காலம் - 10.11.1971 முதல் 03.12.2019 வரை
27 ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் காலம் - 13.12.2019 முதல் தற்போது வரை

நன்கொடைகள்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் கட்ட தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் தமிழக அரசுக்கு தானமாக வழங்கப்பட்டது. [3][4]

தருமபுரம் ஆதீன கல்வி நிறுவனங்கள்

தருமபுரம் ஆதீனம் என்பது சைவ சித்தாந்தத்தைப் பரப்பும் தொண்டில் ஈடுபட்ட ஆன்மீக அமைப்பாகும். இது 'ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 40 கல்வி நிறுவனங்களை நடத்துகிறது.

கல்வி நிறுவனங்களின் பட்டியல்

எண் பள்ளியின் பெயர் இடம்
1 தருமபுரம் ஆதீனத் திருமடம் வேதசிவாகம பள்ளி தருமபுரம்
2 தருமபுரம் ஆதீனத் திருமடம் தேவார பாடசாலை தருமபுரம்
3 ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தருமபுரம்
4 ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி தருமபுரம்
5 ஸ்ரீ குருஞானசம்பந்தர் பாலர் பள்ளி தருமபுரம்
6 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் கார்டன் கோர்ட் கேம்பிரிட்ஜ் பள்ளி, காற்றடித்தட்டு கன்னியாகுமரி
7 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் முத்துசாமி விஸ்வநாதன் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி மதிறவேலூர்
8 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் லோகம்பாள் குழந்தைவேலு அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி மதிறவேலூர்
9 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் காந்தி வித்யாலயா உமா மகளிர் உயர்நிலைப் பள்ளி திருச்சிற்றம்பலம்
10 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் V.T.P. அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, தென்பதி சிறுகாழி
11 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் காமாட்சி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி கண்ணியனத்தம்
12 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் சிற்றம்பலநாதிகள் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி சித்தார்காடு
13 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் பக்த தயுமானவர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, மலைக்கோட்டை திருச்சி
14 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ராமகிருஷ்ணா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி கீழக்கட்டூர்
15 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் கல்யாணிஸ்வரி வித்யாலயா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி மொழையூர்
16 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் காந்தி வித்யாலயா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி திருச்சிற்றம்பலம்
17 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் தியாகராஜா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி திருவம்பநல்லூர்
18 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி முள்ளுக்குடி
19 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் சொக்கலிங்க சுகந்தா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி கீழப்பெரும்பள்ளம்
20 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மீனாட்சி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, நெப்பத்தூர் சிறுகாழி
21 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் அகிலாண்டேஸ்வரி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி பணங்காடி
22 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி விசாலூர்
23 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி பூத்தனூர்
24 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி, மாணந்திருவாசல், திருப்புங்கூர் சிறுகாழி
25 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் திருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, நாங்குநேரி திருநெல்வேலி
26 இராமன் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, மணஞ்சேரி கும்பகோணம்
27 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் முத்தமாள் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி, திருவளஞ்சுழி, மணஞ்சேரி கும்பகோணம்
28 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிதம்பரம்
29 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளி திருக்கடவூர்
30 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வைதீஸ்வரன் கோவில்
31 ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி
32 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ ராமகிருஷ்ணன் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, கீழக்காட்டூர் திருபனந்தாள்
33 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ தியாகராஜா அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி, திருவம்பநல்லூர் திருபனந்தாள்
34 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் கணபதி நேஷனல் நடுநிலைப் பள்ளி குத்தாலம்
35 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி முள்ளுக்குடி
36 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி, பணங்காடி கட்சணம் திருக்குவளை
37 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி, பூத்தனூர், எடுத்துக்கட்டி செம்மனற்கோவில்
38 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி, விசாலூர் செம்மனற்கோவில்
39 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் எழில் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறுகாழி
40 ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் திருநாவுக்கரசு நடுநிலைப் பள்ளி கும்பகோணம்

இப்பள்ளிகள் அனைத்தும், தரமான கல்வி, முக்கியமான கட்டுப்பாடுகள், மற்றும் பண்பாட்டுச் சிந்தனைகளை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதனையும் காண்க

கருவிநூல்

மேற்கோள்கள்

  1. M. Thangaraj (2003). Tamil Nadu: an unfinished task. SAGE. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761997806, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-9780-1.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. Retrieved 2014-12-12.
  3. https://www.puthiyathalaimurai.com/newsview/127382/Chief-Minister-laid-the-foundation-stone-of-Mayiladuthurai-New-Collector-s-Office-through-video
  4. "பால் பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சியரகம் அமைக்க எதிா்ப்பு". Dinamani. Retrieved 2022-05-19.

காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=தருமை_ஆதீனம்&oldid=392111" இலிருந்து மீள்விக்கப்பட்டது