தர்சன் தியாகராஜா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தர்சன் தியாகராஜா
பிறப்பு17 செப்டம்பர் 1990 (1990-09-17) (அகவை 35)[1]
யாழ்ப்பாணம், இலங்கை
பணி
  • வடிழகர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது
பட்டம்மிஸ்டர் சிறீலாங்கா இன்டர்நேஷனல் (2014)

தர்சன் தியாகராஜா (Tharshan Thiyagarajah) என்பவர் ஒரு இலங்கை நடிகரும், வடிவழகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மையாகப் பணியாற்றுகிறார்.

குடும்பப் பின்னணி

இவர் யாழ். வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும் புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான கே.வி.தம்பு மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார். தியாகராசா தம்பு, நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவார்.[2]

துவக்ககால வாழ்க்கையும் தொழிலும்

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்சன், ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தார். 2014 ஆம் ஆண்டு வடிவழகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி மிஸ்டர் இலங்கை என்ற சர்வதேச போட்டி பட்டத்தை வென்றார். [ சான்று தேவை ] வடிவழகுக்கான தனது புரவலருடன் ஏற்பட்ட சில சிக்கல்களுக்குப் பிறகு, இந்தியா செல்ல முடிவெடுத்தார்.[3] 2019 ஆம் ஆண்டில், பிக் பாஸ் தமிழ் 3 என்ற உண்மைநிலை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இந்திய தொலைக்காட்சியில் அறிமுகமானார்.[4] நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, முகன் ராவுடன் தி வால் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தோன்றினார். பிக் பாசைத் தொடர்ந்து, கே. எஸ். ரவிக்குமார் மற்றும் சக இலங்கை நடிகை லாஸ்லியா மரியனேசன் ஆகியோருடன் இணைந்து கூகுள் குட்டப்பா (2022) படத்தில் நடிக்க தர்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் மலையாளத் திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும்.[5][6][7] இவரது அடுத்த படம் எம். சரவணன் இயக்கிய நாடகப்படமான நாடு (2023) ஆகும். அப்படம் கொல்லி மலைகளில் படமாக்கபட்டது.[8] சரண்டர் (2025) என்ற குற்ற நாடகப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்குத் தயாராவதற்காக, ஒரு காவல்துறை அதிகாரியிடம் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றார்.[9]

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2022 கூகுள் குட்டப்பா ஆதி
2023 நாடு மாரி
2025 சரண்டர் புகழ்

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பங்கு தொலைக்காட்சி குறிப்புகள் மேற்கோள்
2019 பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் விஜய் தொலைக்காட்சி வெளியேற்றப்பட்ட நாள் 98 [10][11]
தி வால் விருந்தினர் [12]
பிக் பாஸ் 3 கொண்டாட்டம் அவராகவே சிறப்பு நிகழ்ச்சி

மற்ற பணிகள்

ஆண்டு பாடல் குறிப்புகள்
2016 நீ போன பின்னால் ஜூபேஷ் ஆல்பத்திலிருந்து இசைக் காணொளி
2021 தாய்க்கு பின் தாரம் குறும்படம்
2022 ஐத லக்கா இசைக் காணொளி

மேற்கோள்கள்

  1. "Bigg Boss Tamil 3: Contestant Tharshan Thiyagarajah's girlfriend Sanam Shetty celebrates his birthday; spends time in an orphanage". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 September 2019. Retrieved 23 July 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம்". February 13, 2015. https://www.pungudutivuswiss.com/2015/02/blog-post_151.html. 
  3. "பிக் பாஸ் 3 போட்டியாளர் இலங்கை மாடல் தர்ஷன் தியாகராஜன் முழு விபரம்". Samayam Tamil.
  4. "Bigg Boss Tamil 3: Tharshan Thiyagarajah to get evicted from the show?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 September 2019. Retrieved 13 June 2021.
  5. "Ex-Bigg Boss contestants Tharshan and Losliya to star in Android Kunjappan remake". இந்தியா டுடே. 28 January 2021. Retrieved 13 June 2021.
  6. "Bigg Boss Tamil 3 fame Tharshan Thiyagarajah announces his silver screen debut with an adorable post". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 January 2021. Retrieved 13 June 2021.
  7. "Anirudh Ravichander to compose for Tamil Bigg Boss 3 contestant Tharshan's debut film?". இந்தியா டுடே. 18 May 2021. Retrieved 13 June 2021.
  8. Vallavan, Prashanth (December 4, 2023). "'Naadu is not about pointing fingers at anybody'". The New Indian Express.
  9. "Tharshan trains with cop for two weeks to play an SI in 'Surrender'". March 15, 2025 – via The Economic Times - The Times of India.
  10. "Bigg Boss Tamil 3 update, Day 98: Tharshan Thiyagarajah gets evicted from the show". இந்தியா டுடே. 30 September 2019. Retrieved 13 June 2021.
  11. "Bigg Boss Tamil 3: Former contestants vent out their discontent over Tharshan Thiyagarajah's eviction". இந்தியா டுடே. 30 September 2019. Retrieved 13 June 2021.
  12. "The Wall: Bigg Boss Tamil 3 fame Mugen Rao and Tharshan Thiyagarajah have a blast". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 October 2019. Retrieved 13 June 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தர்சன்_தியாகராஜா&oldid=391144" இலிருந்து மீள்விக்கப்பட்டது