திருமணிக்கூடம்
Jump to navigation
Jump to search
| திருமணிக்கூடம் | |
|---|---|
| ஆள்கூறுகள்: | 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E |
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | வரதராஜ பெருமாள் கோயில் |
| பெயர்: | திருமணிக்கூடம் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| அமைவு: | திருநாங்கூருக்கு அருகில் |
| கோயில் தகவல்கள் | |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
| வரலாறு | |
| அமைத்தவர்: | சோழர்கள்[சான்று தேவை] |
திருமணிக்கூடம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இக்கோயிலும் ஒன்றாகும். திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[1] திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர்.[1]
| விவரம் | பெயர் |
|---|---|
| இறைவன் | கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காணப்படும் வரதராஜ பெருமாள்; கஜேந்திரவரதன்; மணிக்கூட நாயகன் |
| இறைவி | திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி |
| தீர்த்தம் | சந்திர புஷ்கரணி |
| விமானம் | கனகவிமானம் |