திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்
சத்தியகிரீசுவரர் கோயில்
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்
சத்தியகிரீசுவரர் கோயில், திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°14′49″N 78°45′06″E / 10.246945°N 78.751615°E / 10.246945; 78.751615
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:திருமயம்
சட்டமன்றத் தொகுதி:திருமயம்
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
ஏற்றம்:142 m (466 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சத்தியகிரீசுவரர்
தாயார்:வேணுவனேசுவரி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைத் திருவிழா,
தைப்பூசம்,
ஆடிப்பூரம்,
தீபாவளி,
தைப்பொங்கல்,
தமிழ்ப் புத்தாண்டு,
ஆங்கிலப் புத்தாண்டு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் நகரில் அமைந்துள்ளது.

அமைவிடம்

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 19.1 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர்

இத்தலத்தின் மூலவர் சத்தியகிரீசுவரர் ஆவார். இறைவி வேணுவனேஸ்வரி ஆவார். [1]

அமைப்பு

பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கடுத்துள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச்சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயிலாக உள்ளது.[1] மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சிவன் கோயிலைத் தனியாகச் சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒரு சேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.[2]

கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.[1]

திருவிழா

சித்திரைத் திருவிழா, தைப்பூசம், பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இவற்றையும் காண்க