துங்கர்வாசு
துங்கர்வாசு Dungarwas | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 28°11′52″N 76°43′05″E / 28.197737°N 76.71813°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | அரியானா |
| மாவட்டம் | ரேவாரி |
| நகராட்சி | ரேவாரி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,666 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 123106[1] |
துங்கர்வாசு (Dungarwas) இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள இரேவாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். துங்கெர்வாசு என்ற பெயராலும் இக்கிராமம் அழைக்கப்படுகிறது. இரேவாரி-தில்லி சாலையில் வலது பக்க அணுகு சாலையில் சுமார் 11.8 கிலோமீட்டர் (7.3 மைல்) தொலைவில் துங்கர்வாசு கிராமம் உள்ளது. இடதுபுறத்தில் மசானி மூன்றாவது கிராமமாகும்.[1]
துங்கர்வாசு கிராமத்தில் உள்ள பாபா உரூபதாசு கோயில் பிரபலமான ஒரு மதத் தலமாகும்.
மக்கள்தொகையியல்
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, துங்கர்வாசு கிராமத்தில் 299 வீடுகள் இருந்தன. மக்கள் தொகை 1666 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 51.86% மற்றும் பெண்கள் 48.13% இருந்தனர். துங்கர்வாசின் சராசரி கல்வியறிவு விகிதம் 75.99% ஆகும், இது தேசிய சராசரியான 74% என்பதை விட அதிகமாகும்; ஆண்களின் கல்வியறிவு 57.66% ஆகவும் பெண்களின் கல்வியறிவு மொத்த கல்வியறிவு பெற்றவர்களில் 42.33% ஆகும். துங்கர்வாசின் மக்கள் தொகையில் 11.7% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Pincode" (PDF). rewari.gov.in. Archived from the original (PDF) on 17 July 2014. Retrieved 2014-04-13.
- ↑ "Census of India 2011". Retrieved 12 March 2014.