ஆள்கூறுகள்: 23°42′26″N 86°33′55″E / 23.70722°N 86.56528°E / 23.70722; 86.56528

துதியா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
துதியா
Dudhiya

கிராமம்
துதியா Dudhiya is located in சார்க்கண்டு
துதியா Dudhiya
துதியா
Dudhiya
இந்தியாவின் சார்க்கண்டில் அமைவிடம்
துதியா Dudhiya is located in இந்தியா
துதியா Dudhiya
துதியா
Dudhiya
துதியா
Dudhiya (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°42′26″N 86°33′55″E / 23.70722°N 86.56528°E / 23.70722; 86.56528
நாடு இந்தியா
மாநிலம்சார்க்கண்டு
மாவட்டம்தன்பாத்து
அரசு
 • வகைசார்பாண்மை மக்களாட்சி
 • நிர்வாகம்துதியா பஞ்சாயத்து
பரப்பளவு
 • மொத்தம்5.65 km2 (2.18 sq mi)
ஏற்றம்
199 m (653 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,046
 • அடர்த்தி540/km2 (1,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
828201
அஞ்சல் குறியீட்டு எண்0326
வாகனப் பதிவுஜே எச் 10
இணையதளம்dhanbad.nic.in

துதியா (Dudhiya) இந்தியாவின் சார்க்கண்டில் உள்ள தன்பாத் மாவட்டத்தின் பாலியாபூர் சமூக மேம்பாட்டுத் தொகுதியிலுள்ள ஒரு கிராமமாகும்.[1] துதியா கிராமம் சிந்துரி சட்டமன்றத் தொகுதிக்கும் தன்பாத் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[2]

புவியியல்

23°42′26″வடக்கு 86°33′55″கிழக்கு என்ற புவியியல் ஆள்கூறுகளில் துதியா கிராமம் 5.65 சதுரகிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் துதியா கிராமத்தில் மொத்தம் 561 குடும்பங்கள் வசித்தன. இக்குடும்பங்களில் மொத்தமாக 3046 மக்கள் இருந்தனர். இம்மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 1572 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 1474 ஆகவும் இருந்தது.

துதியா கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 480 ஆகும். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 15.76% ஆகும். கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 938 ஆகும். இது சார்க்கண்ட்டின் மாநில சராசரியான 949 என்பதை விட குறைவாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி துதியாவ் உக்கான குழந்தை பாலின விகிதம் 928 ஆகும், இது மாநில சராசரியான 948 என்பதை விட குறைவாகும்.

சார்க்கண்டை விட துதியா கிராமம் அதிக எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டிருந்தது. துதியா கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் சார்க்கண்டின் 66.41% என்பதுடன் ஒப்பிடும்போது 69.41% ஆக இருந்தது. துதியாவில் ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 82.62% ஆகவும், பெண்கள் எழுத்தறிவு விகிதம் 55.35% ஆகவும் இருந்தது.[3]

மாவோயிசுட்டு செயல்பாடுகள்

சார்க்கண்ட் மாநிலம் மாவோயிசுட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, தன்பாத் மாநிலத்தில் மிகவும்/மிதமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, தன்பாத் மாவோயிசுட்டு நடவடிக்கைகளைத் தடுக்க மாநில காவல்துறையால் கவனம் செலுத்தும் பகுதியாக அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், தன்பாத் பகுதியில் சில தனிமைப்படுத்தப்பட்ட மாவோயிசுட்டு நடவடிக்கைகள் இருந்தன.[4]

மேற்கோள்கள்

  1. "Ret mandi in Dudhiya, bus stand in Nayta Mundla start next week". The Times of India. 2024-02-09. https://timesofindia.indiatimes.com/city/indore/ret-mandi-in-dudhiya-bus-stand-in-nayta-mundla-start-next-week/articleshow/107540964.cms. 
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): DUDHIYA". localbodydata.com. Retrieved 2024-06-04.
  3. "Dudhiya Village Population - Baliapur - Dhanbad, Jharkhand". www.census2011.co.in. Retrieved 2024-06-04.
  4. "Anti-Maoist ops stepped up in Dhanbad". The Times of India. 2016-11-12. https://timesofindia.indiatimes.com/city/ranchi/Anti-Maoist-ops-stepped-up-in-Dhanbad/articleshow/55382326.cms. 
"https://tamilar.wiki/w/index.php?title=துதியா&oldid=401275" இலிருந்து மீள்விக்கப்பட்டது