துளசி சுந்தரம்
Jump to navigation
Jump to search
துளசி சுந்தரம் | |
|---|---|
| பிறப்பு | 1942 |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
துளசி சுந்தரம் (பி: 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியையும் கூட.
எழுத்துத் துறை ஈடுபாடு
1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியவற்றையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "பிள்ளை நிலா" (சிறுகதைகள், 1997)
பரிசுகளும் விருதுகளும்
- பணமுடிப்பு - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983);
- பஹாங் மாநிலச் சிறந்த எழுத்தாளர் பணமுடிப்பு (1986);
- முதல் பரிசு - பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தினக் கட்டுரைப் போட்டி (1994)
- எழுத்தாளர் சங்கத் தங்கப் பதக்கம் (1997).