தேனி மாவட்ட ஆட்சியர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள்: ஜூலை 25, 1996 மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் ஜனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. இந்த தேனி மாவட்டத்தின் ஆட்சியர்கள் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.

வ.எண். மாவட்ட ஆட்சியரின் பெயர் பதவிக் காலம் குறிப்புகள்
1 டாக்டர். கே. சத்யகோபால் 01-01-1997 முதல் 22-04-1998
2 பி.எம்.பசீர் அகமது 22-04-1998 முதல் 19-01-2001
3 பிரதீப் யாதவ் 19-01-2001 முதல் 08-06-2001
4 வி.சந்திரசேகரன் 08-06-2001 முதல் 10-06-2001 மாவட்ட வருவாய் அலுவலரான இவர்
மாவட்ட ஆட்சியராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
5 அதுல் ஆனந்த் 11-06-2001 முதல் 06-06-2004
6 சுனில் பாலிவால் 06-06-2004 முதல் 08-01-2005
7 டி.ராஜேந்திரன் 08-01-2005 முதல் 10-01-2005 மாவட்ட வருவாய் அலுவலரான இவர்
மாவட்ட ஆட்சியராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
8 ராஜேஷ் லக்கானி 10-01-2005 முதல் 10-11-2006
9 ஹர் சகாய் மீனா 10-11-2006 முதல் 26-02-2008
10 எஸ். ஜே. சிரு 27-02-2008 முதல் 09-11-2008
11 பூ. முத்துவீரன் 10-11-2008 முதல் 21-03-2011
12 ஏ. கார்த்திக் 22-03-2011 முதல் 13-05-2011
13 டாக்டர். பிருந்தா தேவி 14-05-2011 முதல் 05-06-2011 மாவட்ட வருவாய் அலுவலரான இவர்
மாவட்ட ஆட்சியராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்.
14 டாக்டர். கே. எஸ். பழனிச்சாமி 06-06-2011 முதல் 27.12.2014