தொகைச்சொல் (7 பொருள்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

நிகண்டு நூல்கள் தொகையகராதி என்னும் தலைப்பில் தொகைச்சொற்கள் பலவற்றைச் சுட்டி அவற்றை விரித்துக் காட்டியுள்ளன. அவற்றில் சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு ஆகியவற்றறில் ஏழு பொருள்களைக் குறிக்கும் தொகைச்சொல் இங்கு விளக்கப்படுகிறது. [1]

1

தொகைச்சொல் திவாகர நிகண்டு விரி
ஏழு பெருந் தீவு (பொழில்)
  1. நாவலந்தீவு
  2. இறலித்தீவு
  3. குசைச்தீவு
  4. கிரவுஞ்சத்தீவு
  5. சான்மலித்தீவு (சால் = நெல்)
  6. தெங்கின் தீவு
  7. புட்கரத்தீவு
ஏழு சமுத்திரம் (மாகடல்)
  1. உவர்
  2. கரும்பு
  3. மது
  4. நெய்
  5. தயிர்
  6. பால்
  7. புனல்
மேல் ஏழ் உலகம்
  1. பூலோகம்
  2. புவலோகம்
  3. சுவலோகம்
  4. மகலோகம்
  5. சனலோகம்
  6. தவலோகம்
  7. சத்தியலோகம்
கீழ் ஏழ் உலகம் (பாதால லோகம்)
  1. அதலம்
  2. விதலம்
  3. சுதலம்
  4. நிதலம்
  5. தராதலம்
  6. ரசாதலம்
  7. மகாதலம்
  • ஏழேழ் 14 உலகம்
சத்த குல பருப்பதம் (ஏழு மலை)
  1. இமயம்
  2. மந்தரம்
  3. கைலை
  4. வடவிந்தம்
  5. நிடதம்
  6. ஏமகூடம்
  7. நீலகிரி

6

ஏழு மேகம்
  1. புட்கலாவர்த்தம்
  2. சங்காரித்தம்
  3. ஆவர்த்தம்
  4. சம்வர்த்தம்
  5. துரோணம்
  6. காளமுகி
  7. நீலவருணம்
ஏழு மழை (மாரி)
  1. பொன்
  2. பூ
  3. புனல்
  4. மணி
  5. மண்
  6. கல்
  7. தீ
ஏழு நரகம்
  1. பெருங்களிற்று வட்டம்
  2. பெருமணல் வட்டம்
  3. எரியின் வட்டம்
  4. புகையின் வட்டம்
  5. இருளின் வட்டம்
  6. பெருங்கீழ் வட்டம்
  7. அரிபடை வட்டம்
சத்த மாதர் (ஏழு கன்னிமார்)
  1. அபிராமி
  2. இந்திராணி
  3. வைணவி
  4. வராகி
  5. கௌமாரி
  6. மயேசுரி
  7. மாகாளி
எழுவகைத் தாது
  1. இரதம்
  2. உதிரம்
  3. என்பு
  4. தோல்
  5. தசை
  6. மூளை
  7. சுக்கிலம்

11

செங்கோல் வேந்தனின் எழு வகைப் பேறு
  1. அறம்
  2. பொருள்
  3. இன்பம்
  4. அன்பு
  5. பொறுமை
  6. திறம்பாப் புகழ்
  7. மதி

மேற்கோள்

  1. சேந்தன் திவாகரம் பக்கம் 294 முதல்
"https://tamilar.wiki/w/index.php?title=தொகைச்சொல்_(7_பொருள்)&oldid=407633" இலிருந்து மீள்விக்கப்பட்டது