தொகையுருவகம்
Jump to navigation
Jump to search
தொகையுருவகம் (தொகை உருவகம்) என்பது உருவக வகைகளில் ஒன்று. ஆகிய என்னும் பெயரெச்ச வாய்பாடும், அக என்னும் வினையெச்ச வாய்பாடும் உவமை உருபுகள். இந்த உவமை உருபுகள் மறைந்து இரண்டு சொற்களுக்கு இடையே தொக்கிக்கொண்டு, வினைத்தொகை, பண்புத்தொகை போலத் தொகையாகி வருவது தொகையுவம்.
பாடல் எடுத்துக்காட்டு
- அங்கை மலரும் அடித் தளிரும் கண் வண்டும்
- கொங்கை முகிழும் குழல் காரும் - தங்கியது ஓர்
- மாதர் கொடி உளதால் அன்பா அதற்கு எழுந்த
- காதற்கு உளதோ கரை [1]
இந்தப் பாடலின் செய்தி
- கையாகிய தாமரை மலர்
- அடியாகிய மாந்தளிர்
- கண்ணாகிய வண்டு
- கொங்கை ஆகிய மொட்டு
- கூந்தல் ஆகிய கார்முகில்
- இவற்றைத் தாங்கிக்கொண்டு
- மாதர் என்னும் கொடி உள்ளது.
- நண்பா
- அந்தக் கொடியை அடைய எனக்குத் தோன்றிய காதலுக்குத்தான் கரை இல்லலை.
- தலைவன் பாங்கனிடம் சொல்கிறான்
மேற்கோள்
- ↑ தண்டியலங்காரம், திருப்பனந்தாள் பதிப்பு, 1967, பக்கம் 62