நாலு வேலி நிலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாலு வேலி நிலம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎஸ். வி. சகஸ்ரநாமம்
சுஜா ஸ்கிரீன்ஸ்
கதைதி. ஜானகிராமன்
இசைகே. வி. மகாதேவன்
எம். கே. ஆத்மநாதன்
நடிப்புஎஸ். வி. சகஸ்ரநாமம்
குலதெய்வம் ராஜகோபால்
ஆர். முத்துராமன்
ஏ. வீரப்பன்
மைனாவதி
எஸ். என். லட்சுமி
பண்டரிபாய்
தேவிகா
வெளியீடுசெப்டம்பர் 2, 1959
நீளம்15649 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாலு வேலி நிலம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தி. ஜானகிராமன் கதை, உரையாடல் எழுத, எஸ். வி. சகஸ்ரநாமம் தயாரிக்க முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், குலதெய்வம் ராஜகோபால், எஸ். வி. சுப்பையா, முத்துராமன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

தி. ஜானகிராமன் எழுதிய நாலு வேலி நிலம் என்ற நாடகத்தை எஸ். வி. சகஸ்ரநாமம் தனது சேவா ஸ்டேஜ் நாடகக் குழு மூலமாக மேடையேற்றி, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே இந்த நாடகத்தை எஸ். வி. சகஸ்ரநாமமே திரைப்படமாக தயாரித்தார். இப்படமானது தஞ்சை மாவட்ட வழக்குமொழிப் பண்பாடு, வாழ்க்கை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதாக இருந்தது. என்றாலும் இத்திரைப்படம் வெற்றிபெறவில்லை என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.[4]

கதைச்சருக்கம்

சொந்தமாக நாலு வேலி நிலத்தை வாங்கவேண்டும் என்று கனவுகண்ட கண்ணுசாமி என்பவரின் வாழ்க்கைக் கதையாக இப்படம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "1959 – நாலு வேலி நலிம் [sic] –சுஜா ஸ்கிரின்ஸ்" [1959 – Naalu Veli Nilam –சுஜா ஸ்கிரின்ஸ்]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 20 June 2017. பார்க்கப்பட்ட நாள் 20 June 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. நிலமே வாழ்க்கை, எஸ். ராமகிருஷ்ணன், இந்து தமிழ், 2020 மார்ச் 8
"https://tamilar.wiki/index.php?title=நாலு_வேலி_நிலம்&oldid=34702" இருந்து மீள்விக்கப்பட்டது