ஆள்கூறுகள்: 28°03′N 81°37′E / 28.050°N 81.617°E / 28.050; 81.617

நேபாள்கஞ்ச்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நேபாள்கஞ்ச்

नेपालगन्ज

துணை மாநகராட்சி
பாகேஸ்வரி குளக்கரையில் அமைந்த மகாதேவர் கோயில்
பாகேஸ்வரி குளக்கரையில் அமைந்த மகாதேவர் கோயில்
அடைபெயர்(கள்): NPJ
நேபாள்கஞ்ச் is located in நேபாளம்
நேபாள்கஞ்ச்
நேபாள்கஞ்ச்
நேபாளத்தில் நேபாளகஞ்சின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°03′N 81°37′E / 28.050°N 81.617°E / 28.050; 81.617
நாடு நேபாளம்
மாநிலம்லும்பினி மாநிலம்
மாவட்டம்பாங்கே
துணை மாநாகராட்சிநேபாள்கஞ்ச்
ஏற்றம்
150 m (490 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,28,450
 • அடர்த்தி1,592.13/km2 (4,123.6/sq mi)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்)
இணையதளம்www.nepalgunjmun.gov.np

நேபாள்கஞ்ச் (Nepalgunj) (நேபாளி: नेपालगन्ज, நேபாள நாட்டின் லும்பினி மாநிலத்தில் உள்ள பாங்கே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், துணை மாநகராட்சியும் ஆகும்.

தராய் சமவெளியில் அமைந்த நேபாள்கஞ்ச் நகரத்தின் தெற்கில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பகராயிச் மாவட்டம் எல்லையாக அமைந்துள்ளது.

தொழில் வளர்ச்சி அடைந்த நேபாள்கஞ்ச் நகரத்தில் மேற்கு ரப்தி ஆற்றின் நீரால் வளமையாக உள்ளது. நேபாள்கஞ்சின் தென்மேற்கில் 85 கிலோ மீட்டர் தொலைவில் கோராயி நகரமும், 16 கிலோ மீட்டர் தொலைவில் கோஹால்பூர் நகரமும், 35 கிலோ மீட்டர் தொலைவில் குலாரியா நகரமும் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள்கஞ்ச் நகரத்தின் மக்கள் தொகை 1,28,450 ஆக உள்ளது.[1] நேபாள்கஞ்ச் நகரத்தில் நேபாள மொழி, பஹாரி மொழி, அவதி மொழிகள் பேசப்படுகிறது. இந்நகர மக்கள் இந்து சமயம், பௌத்தம், இசுலாம், சீக்கியம் மற்றும் கிறித்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்நகரத்தில் பாகேஸ்வரி கோயில் அமைந்துள்ளது.

தட்ப வெப்பம்

நேபாள்கஞ்ச் நகரத்தின் தட்ப வெப்பம், கோடைகாலத்தில் அதிக பட்ச வெப்பநிலை 40° செல்சியசிற்கும் மேலாகவும், குளிர்காலத்தில் அதிக பட்ச வெப்பம் 4°செல்சியசுமாக உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நேபாள்கஞ்ச்&oldid=419547" இலிருந்து மீள்விக்கப்பட்டது