நோவாக் ஜோக்கொவிச்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நோவாக் ஜோக்கொவிச்
2019 விம்பிள்டன் கோப்பையுடன் நோவாக் ஜோக்கொவிச்
தாய்மொழிப் பெயர்Новак Ђоковић
Novak Đoković
நாடு செர்பியா
வாழ்விடம்மான்டே கார்லோ, மொனாக்கோ
பிறப்பு22 மே 1987 (1987-05-22) (அகவை 39)
பெல்கிறேட், செர்பியா, யுகோசுலாவியா
(இப்போது செர்பியா)
உயரம்1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்)[1][2]
தொழில் ஆரம்பம்2003
விளையாட்டுகள்வலது கை ஆட்டக்காரர்
பயிற்சியாளர்கொரான் இவானிசெவிச்
பரிசுப் பணம்US$159,041,453[3]
*   தொழில் முறை ஆட்டக்காரர்கள் கலந்த பின் பெருந்தொடரில் இதுவரை அதிக பணத்தை பெற்றவர்
இணையதளம்novakdjokovic.com
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்1012–204 (83.22%)[4]
பட்டங்கள்94 (தொழில் முறை ஆட்டக்காரர்கள் கலந்த பின் பெருந்தொடரில் மூன்றாம் இடம்)
அதிகூடிய தரவரிசை4 யூலை 2011இல் முதல் இடம்
தற்போதைய தரவரிசைஇரண்டாம் இடம் (17 சூலை 2023)[5]
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெற்றி (2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020, 2021, 2023)
பிரெஞ்சு ஓப்பன்வெற்ற' (2016, 2021, 2023)
விம்பிள்டன்வெற்றி (2011, 2014, 2015, 2018, 2019, 2021, 2022)
அமெரிக்க ஓப்பன்வெற்றி (2011, 2015, 2018)
ஏனைய தொடர்கள்
Tour Finalsவெற்றி (2008, 2012, 2013, 2014, 2015, 2022)
ஒலிம்பிக் போட்டிகள் 2008 கோடை கால ஒலிம்பிக்சு
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்61–76 (44.53%)
பட்டங்கள்1
அதியுயர் தரவரிசை114ஆம் இடம் (30 நவம்பர் 2009)
தற்போதைய தரவரிசை533ஆம் இடம் (27 யூன் 2022)[6]
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்முதல் சுற்று - 2006,2007
பிரெஞ்சு ஓப்பன்முதல் சுற்று - 2006
விம்பிள்டன்இரண்டாம் சுற்று - 2006
அமெரிக்க ஓப்பன்முதல் சுற்று - 2006
ஏனைய இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்இரண்டாம் சுற்று 2016
ஏனைய கலப்பு இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்கால் இறுதி - 2020
அணிப் போட்டிகள்
டேவிசுக் கோப்பைவெற்றி 2010 டேவிசுக் கோப்பை
ஒப்மேன் கோப்பைஇறுதி, 2008, 20213 ஓப்மேன் கோப்பை
ஏடிபி விளையாட்டு குழுவில் தலைவராக
பதவியில்
30 ஆகத்து 2016 – 30 ஆகத்து 2020
துணை அதிபர்கெவின் ஆண்டர்சன்
முன்னையவர்எரிக் புடோரக்
பின்னவர்கெவின் ஆண்டர்சன்
கையெழுத்து
பதக்கத் தகவல்கள்
இற்றைப்படுத்தப்பட்டது: 10 யூலை 2022.

நோவாக் ஜோக்கொவிச் (செர்பிய மொழி: Новак Ђоковић, IPA: [ˈnɔvaːk 'ʥɔːkɔviʨ], ஒலிப்பு, பிறப்பு மே 22, 1987, பெல்கிரேட்) செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆவார். சூலை 4,2011 முதல் டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார். இது வரை 24 முறை கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) பட்டங்களை பெற்றுள்ளார். நான்கு பெருவெற்றித் தொடர்களிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆசுதிரேலிய ஓப்பன் மற்றும் யூ. எசு. ஓப்பன்

ஜனவரி 2008 ஆஸ்திரேலியன் ஓப்பனில் தனது முதலாம் பெருவெற்றி (கிராண்ட் ஸ்லாம்) போட்டியை வென்றுள்ளார். பெருவெற்றித்தொடர் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற முதல் செர்பிய டென்னிஸ் வீரர் இவரே.இதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் ஆகிய மூன்று பெருவெற்றிப் போட்டிகளிலும் வென்றுள்ளார். இதனால் ஒரே நாட்காட்டியாண்டில் மூன்று பெருவெற்றித் தொடர் போட்டிகளை வென்ற ஆறாவது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். 2010ஆம் ஆண்டு டேவிசுக் கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு போலவே 2015ஆம் ஆண்டும் மூன்று போட்டிகளை வென்றவர் இவர்.

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ரஃபயெல் நதாலை 5-7, 6-4, 6-2, 6-7 (5), 7-5 என்று ஐந்து தொகுப்புகளில் வென்று வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ஆண்டி முர்ரேவை 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார். ஏழு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார். இது சாதனையாகும். ராய் எமர்சென் என்பவர் தான் இவருக்கு முன் ஆறு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் மூன்று முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.

விம்பிள்டன்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றுகளில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். இரண்டு முறையும் இவருக்கு எதிராக ஆடி, தோல்வி அடைந்தவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோசர் பெடரர் ஆவார்.

பிரெஞ்சு ஓப்பன்

ஜோக்கொவிச் 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றுகளில் வென்று பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.[7]

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. "Novak Djokovic". ATP Tour. Retrieved 1 April 2019.
  2. "Djokovic, Novak". novakdjokovic.com. Retrieved 13 July 2015.
  3. "ATP Prize Money Leaders" (PDF).
  4. In ATP Tour and Grand Slam main draw matches, Summer Olympics, Davis Cup and Laver Cup; 2nd in the Open Era
  5. "Rankings Singles". atptour.com.
  6. "Rankings Doubles". atptour.com.
  7. https://www.dinamalar.com/news_detail.asp?id=2784345
"https://tamilar.wiki/w/index.php?title=நோவாக்_ஜோக்கொவிச்&oldid=421025" இலிருந்து மீள்விக்கப்பட்டது