பசுபதி (நடிகர்)
(பசுபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பசுபதி | |
|---|---|
| பிறப்பு | பசுபதி ராமசாமி மே 18, 1969 மதுரை, தமிழ் நாடு, இந்தியா |
| செயற்பாட்டுக் காலம் | 1999 இல் இருந்து - இன்று வரை |
| வாழ்க்கைத் துணை | சூர்யா [1] |
பசுபதி (Pasupathy) தமிழ்த் திரைப்பட நடிகரும் மேடை நாடக நடிகரும் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமன்றி மலையாள, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூர் என்னும் புறநகர்ப் பகுதியில் 1969-ல் பிறந்தவர். இவரது பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்ட அருகில் உள்ள " அருமளை" என்கிற கிராமம் ஆகும். இவரின் தந்தை ராமசாமி ஆர்சுத்தியார்.[2]
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
| ஆண்டு | படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1999 | ஹவுஸ்புல் | கையூட்டு வாங்கும் காவலர் | |
| 2001 | மாயன் | டாமினிக் ராஜ் | |
| 2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | பசுபதி | |
| 2003 | தூள் | ஆதி | |
| இயற்கை | தந்தை ஸ்டீபன் | ||
| 2004 | அருள் | கஜபதி | |
| விருமாண்டி | தொத்தாள தேவர் | ||
| மச்சி | நாராயணன் | ||
| சுள்ளான் | சூரி | ||
| மதுர | கே. டி. ஆர். | ||
| 2005 | திருப்பாச்சி | பட்டாசு பாலு | |
| மும்பை எக்ஸ்பிரஸ் | சிதம்பரம் | ||
| மஜா | ஆதி | ||
| 2006 | வெயில் | முருகேசன் | |
| ஈ (திரைப்படம்) | Nellai Mani | பிலிம்பேர் சிறந்த துணை நடிகர் விருது சிறந்த எதிர்நாயகன் நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது | |
| 2007 | மணிகண்டா | ||
| 2008 | ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்) | Nedumaran | |
| குசேலன் | பாலாகிருஷ்ணன் | ||
| 2009 | தநா-07-அல 4777 | மணி | |
| வெடிகுண்டு முருகேசன் | முருகேசன் | ||
| 2012 | அரவான் | கொம்புதி | |
| 2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | அண்ணாசி | |
| 2014 | நீ எங்கே என் அன்பே | அஜ்மத் அலி கான் | |
| மொசக்குட்டி | |||
| 2015 | இந்தியா பாகிஸ்தான் | காட்டுமுத்து | |
| யாகாவாராயினும் நா காக்க | காசிமேடு தேவா | ||
| 10 எண்றதுக்குள்ள | தாஸ் | ||
| 2016 | அஞ்சல | முத்திருலாண்டி | |
| 2017 | மா சூ கா | அறிவளகன் | |
| நகர்வலம் | சிறப்புத் தோற்றம் | ||
| கருப்பன் | மாயி | ||
| கொடிவீரன் | வில்லங்கம் வெள்ளைக்காரன் | ||
| 2019 | வெண்ணிலா கபடி குழு 2 | சாமி | |
| அசுரன் | முருகேசன் | [3] | |
| 2021 | சார்பட்டா பரம்பரை | இரங்கன் வாத்தியார் | சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் |
| 2022 | சகுந்தலாவின் காதலன் | ||
| 2023 | தண்டட்டி | சுப்பிரமணி | [4] |
| 2024 | தங்கலான் | கெங்குபட்டார் |
மேற்கோள்கள்
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/article/68241.html
- ↑ "ஜனநாதன் நினைவுகள் பகிரும் பசுபதி ". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/kollywood/actor-pasupathi-remembering-his-fond-memories-of-director-jananathan.
- ↑ "Actor Pasupathi on board Dhanush's 'Asuran'" (in en). The News Minute. 18 February 2019 இம் மூலத்தில் இருந்து 29 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231029183341/https://www.thenewsminute.com/flix/actor-pasupathi-board-dhanush-s-asuran-96930. பார்த்த நாள்: 29 October 2023.
- ↑ "Thandatti gets a release date". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 25 May 2023. Archived from the original on 25 May 2023. Retrieved 18 June 2023.