பஞ்சென் லாமா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கெத்ரூப் ஜெ, முதல் பஞ்சென் லாமா

பஞ்சென் லாமா (Panchen Lama, எளிய சீனம்: 班禅喇嘛; மரபுவழிச் சீனம்: 班禪喇嘛), அல்லது பஞ்சென் எர்தேனி (Panchen Erdeni, எளிய சீனம்: 班禅额尔德尼; மரபுவழிச் சீனம்: 班禪額爾德尼), திபெத்திய பௌத்த மதத்தின் கெலுக்பா பரம்பரையில் தலாய் லாமாவிற்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ள உயரிய பௌத்த ஆசான் (லாமா) ஆவார். கெலுக்பா பரம்பரையினரே 16வது நூற்றாண்டிலிருந்து 1959இல் திபெத்தியப் புரட்சி வரையிலும் மேற்கு திபெத்தை ஆண்டவர்களாவர். தற்போதைய (பதினொன்றாவது) பஞ்சென் லாமா குறித்து சர்ச்சை நிலவுகிறது; சீன மக்கள் குடியரசு அரசு கியான்சைன் நோர்பு என்பவரை பஞ்சென் லாமாவாக அறிவிக்க 14வது தலாய் லாமா மே 14, 1995இல் கெதுன் சோக்கைல் நியிமா என அறிவித்துள்ளார். ஆறு அகவையரான நியிமா அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே பொதுமக்கள் பார்வையிலிருந்து காணாமல் போனார். சீன அரசு அதிகாரிகள் இவரை மற்றவர்கள் திபெத்திற்கு வெளியே கூட்டிச்செல்லாதிருக்க தனது பாதுகாவலில் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.[1] [2] திபெத்தியர்களும் மனித உரிமைக் குழுக்களும் இவரது விடுதலையைக் கோரிப் போராடி வருகின்றனர்.[3]

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பஞ்சென்_லாமா&oldid=423600" இலிருந்து மீள்விக்கப்பட்டது