ஆள்கூறுகள்: 7°56′05.2″S 112°56′50.4″E / 7.934778°S 112.947333°E / -7.934778; 112.947333

பத்தோக் மலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பத்தோக் மலை
Mount Batok
Gunung Batok
பத்தோக் மலை; புரோமோ எரிமலைவாய்
உயர்ந்த புள்ளி
உயரம்2,440 m (8,010 அடி)[1]
புடைப்பு340 m (1,120 அடி)[2]
பட்டியல்கள்ரீபு மலைகள்
ஆள்கூறு7°56′05.2″S 112°56′50.4″E / 7.934778°S 112.947333°E / -7.934778; 112.947333[1]
பெயரிடுதல்
சொற்பிறப்புதேங்காய் ஓடு (ஜாவானிய மொழி)
புவியியல்
நிலவியல்
மலையின் வகைதணல் கூம்பு

பத்தோக் மலை (ஆங்கிலம்: Mount Batok; இந்தோனேசியம்: Gunung Batok) என்பது இந்தோனேசியா, ஜாவா தீவு, கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள தணல் கூம்பு எரிமலை ஆகும். இந்த எரிமலை கடல் மட்டத்திலிருந்து 2,440 மீட்டர் (8,005 அடி) உயரத்தில் உள்ளது. மேலும் இது, புரோபோலிங்கோ பிராந்தியம், (Probolinggo Regency); பசுருவான் பிராந்தியம் (Pasuruan Regency); லுமாஜாங் பிராந்தியம் (Lumajang Regency); மற்றும் மலாங் பிராந்தியம் (Malang Regency); ஆகிய நான்கு பிராந்தியங்களுக்கு இடையில் அமைந்துள்ளது:

படோக் மலையின் அமைவிடம் புரோமோ மலையில் இருந்து மேற்கில் உள்ளது. இந்த மலை டெங்கர் எரிமலை மண்டலத்தில் (Tengger caldera) அமைந்துள்ள செயலற்ற எரிமலைகளில் ஒன்றாகும். இந்த மலை, புரோமோ டெங்கர் செமெரு தேசிய பூங்காவின் (Bromo Tengger Semeru National Park) ஒரு பகுதியாகும்.[3]

சொற்பிறப்பியல்

ஜாவானிய மொழியில், பத்தோக் என்றால் "தேங்காய் ஓடு" என்று பொருள். ஜாவானிய புராணக் கதைகளின்படி, ராரா அன்டெங் (Rara Anteng) எனும் பெண்மணியை ரிஷி பீமா (Resi Bima) என்பவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு ராரா அன்டெங் சில நிபந்தனைகளை விதித்தார்.

அவற்றில் சில நிபந்தனைகளை நிறைவேற்ற ரிஷி பீமா தவறினார். சினம் அடைந்த ரிஷி பீமா ஒரு தேங்காய் ஓட்டை தன் காலால் எட்டி உதைத்தார். அந்தத் தாக்கத்தில் இருந்து படோக் மலை உருவானதாக தெங்கரீஸ் மக்கள் (Tenggerese people) நம்புகிறார்கள். தெங்கரீஸ் மக்கள், ஜாவானிய மக்களின் ஓர் இன துணைக் குழுவாகக் கருதப்படுகிறார்கள்.[4]

ஜாவானிய இனக்குழுவினரான தெங்கரீஸ் மக்கள் மட்டுமே, மஜபாகித் காலத்தில் இருந்து இந்து சமயத்தைப் பின்பற்றி வரும் ஒரே இனக்குழுவினர் ஆகும். தெங்கரீஸ் மக்கள் பத்தோக் மலையின் சுற்றுவட்டாரங்களில் வசித்து வருகின்றனர்.[5][6]

காட்சியகம்

பத்தோக் மலையின் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Tengger Caldera". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம். Retrieved 2010-03-10.
  2. "Tengger Caldera". www.vsi.esdm.go.id (in இந்தோனேஷியன்). Retrieved 2019-03-16.
  3. "This volcano has an elevation of 2,440 metres (8,005 ft) above sea level, and is located between four regencies: Probolinggo Regency, Pasuruan Regency, Lumajang Regency, and Malang Regency". peakvisor. Retrieved 27 February 2025.
  4. James Minahan (2012). Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia. ABC-CLIO. ISBN 978-15-988-4660-7.
  5. Harjawiyana, Haryana; Theodorus Supriya (2001). Kamus unggah-ungguh basa Jawa. Kanisius. p. 185. ISBN 978-979-672-991-3.
  6. Frank Webster Price, ed. (1950). "P.F. Collier & Son Corporation". Collier's Encyclopedia: With Bibliography and Index, Volume 10. Collier. p. 510.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பத்தோக்_மலை&oldid=425769" இலிருந்து மீள்விக்கப்பட்டது