பத்மசாலியர்
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| தமிழ்நாடு முதன்மை ( இக்காலம்) பழமை- தற்பொழுதுள்ள ஆந்திரபிரதேசம் | |
| மொழி(கள்) | |
| தமிழ் முதன்மை சிலர் தெலுங்கும் பேசுவர் | |
| சமயங்கள் | |
| இந்து - பத்மசாலியர்( சைவ செட்டியார்,நெசவு செட்டியார்) | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| சாலியர் |
பத்மசாலியர் (Padmasaliyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தமிழ் மற்றும் தெலுங்கு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் தற்பொழுது உள்ள ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். இச்சமூகத்தினர் தமிழ் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோராவர்.[1] பத்மபிராமின் என்றும் அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் bc மற்றும் obc யிலும் உள்ளனர். இவர்களுள் உட்பிறிவு பல உள்ளது.இதில் குறிப்பாக மார்க்கண்டேய கோத்திரத்தில் உள்ளோர் பழக்க வழங்கங்கள் ஆதி சைவ ஆச்சார்யர்கள் போன்று காணப்படுகிறது.
பல்வேறு சிவாலயங்களில் பிரம்மோற்சவத்தில் முதல்நாள் கொடியேற்றம் விழாவில் இவர்களது உபயம் காணப்படும்
சொற்பிறப்பியல்
பத்மசாலி என்ற சொல் பத்மா மற்றும் சாலி என்ற இரண்டு சொற்களிலிருந்து உருவானது; பத்மா என்றால் தாமரை என்றும் சாலி என்றால் நெசவாளர் என்றும் பொருள்.[2] பத்மா என்ற சொல் விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றிய தாமரை என்ற நூலின் புராணத்தைக் குறிக்கிறது.[3]
தொழில்
இவர்கள் தமிழ்நாட்டின் பெரும்பான்மையாக பல்வேறு வணிகத்தொழிலில் ஈடுபட்டு முன்னேறுகின்றனர். சிலர் நெசவுத் தொழிலிலும் , உடை சார்ந்த நிறுவனம் பெரிய துணி கடைகள்
சைவமரபை பின்பற்றுதல் பொருட்டு சிவாலயங்களில் பணிகளிலும் காணப்படுகின்றனர்.
வாழும் பகுதிகள்
இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், வேலூர், தர்மபுரி, திருநெல்வேலி மற்றும் கள்ளக்குறிச்சி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், கரூர் மற்றும் கோவை, சென்னை - பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
இவர்களின் பழக்கவழக்கம் /தற்போதைய நடைமுறை
சம்பிரதாயத்தின் அடிப்படையில், பத்மசாலிகள் சைவர்கள் மற்றும் வைணவர்கள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். சைவர்கள் சிவனை வழிபடுவதை விரும்புகிறார்கள், வைணவர்கள் விஷ்ணுவை வழிபடுவதை விரும்புகிறார்கள். இவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி சிறப்புற்று வருகின்றனர். பத்மசாலிகள் புனித நூலை அணிகின்றனர்.இவர்கள் பத்ராவதி தாயார் குலத்தவர் பத்ராவதி திருமாலை திருமணம் செய்த பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாறு
புராண சான்றுபடி இவர்களது முழு பாரம்பரியம் மற்றும் தொன்மை:
இவர்கள் நேசநாயனார் குலத்தை சேர்ந்தவர்கள் .ஏறக்குறைய 9 ம் நுற்றாண்டு முதலே திருவாரூர் பகுதிகளில் இருந்துருக்கின்றனர் .
சுந்தரமூர்த்தி சுவாமிகள் நேசநாயனார் பற்றி திருத்தொண்டத்தொகையில் குறிப்பிட்டுள்ளார்.சுந்தரரும் 9 ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேசநாயனார் பற்றிய புராணம் :-
நேச நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியார்களுக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.
| நேச நாயனார் | |
|---|---|
| பெயர்: | நேச நாயனார் |
| குலம்: | சாலியர் |
| பூசை நாள்: | பங்குனி ரோகிணி |
| அவதாரத் தலம்: | காம்பீலி |
| முக்தித் தலம்: | ஆரூர் |
- “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
- வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.
நுண்பொருள்
தொகு
- சிவனடியார்களுக்கு உடை உதவுதல் சிறந்த சிவத்தொண்டு
நேசநாயனார் குருபூசை நாள்: பங்குனி உரோகிணி.
- ↑ Eveline Kumar Suresh Singh, ed. (2004). People of India - Volume 40, Part 2. Anthropological Survey of India. p. 1125.
The mother-tongue of the Padmasaliyar is Telugu, but they speak Tamil with others
- ↑ The Indian Textile Journal (in ஆங்கிலம்). Business Press. 1984. p. 63.
- ↑ Arterburn, Yvonne J. (1982). The loom of interdependence: silkweaving cooperatives in Kanchipuram (in ஆங்கிலம்). Hindustan Pub. Co. p. 46. ISBN 9780391027497.