பனித்திட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பனித்திட்டு
Pannithittu

கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண் -->
607 402
அஞ்சல் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

பனித்திட்டு (Pannithittu) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். தேசிய நெடுஞ்சாலை 45ஏ - க்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. மேலும் பனித்திட்டு கிராமத்தில் மலட்டாறு வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

எல்லைகள்

மேற்கில் கிருமாம்பாக்கம், வடக்கில் மலட்டாறு, கிழக்கில் வங்காள விரிகுடா தெற்கில் பிள்ளையார் குப்பம் ஆகியன பனித்திட்டு கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

கிராமங்கள்

பனித்திட்டு கிராமப் பஞ்சாயத்தின் கீழ் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

  • பனித்திட்டு
  • ஆலடிமேடு
  • ஈச்சங்காடு
  • வம்பாபேட்டை

சாலைப் போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 45ஏ – கிருமாம்பாக்கம் சாலை வழியாக பனித்திட்டு கிராமம் புதுச்சேரியுடன் இணைகிறது. மேலும் பனித்திட்டு கிராமம், பிள்ளையார் குப்பம், மணப்பட்டு வழியாக புதுக்குப்பத்துடன் இணைந்துள்ளது. இதைத்தவிர ரெட்டிச்சாவடியிலிருந்து பனித்திட்டு வழியாக செல்லக்கூடிய மற்றொரு முக்கிய சாலை வசதியும் இங்குண்டு.

அரசியல்

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ,ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் பனித்திட்டு கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2016-03-25.

புற இனைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பனித்திட்டு&oldid=424240" இலிருந்து மீள்விக்கப்பட்டது