பன்வேல்
Jump to navigation
Jump to search
பன்வேல் पनवेल Panvel | |
|---|---|
மாநகரம் | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | ராய்கட் மாவட்டம் |
| மெட்ரோ | மும்பை |
| அருகிலுள்ள நகரங்கள் | மும்பை, நவி மும்பை |
| பெயர்ச்சூட்டு | பனேலி |
| அரசு | |
| • நிர்வாகம் | சிட்கோ (மகாராஷ்டிர நகர, தொழில்துறை முன்னேற்றக் கழகம்); பன்வேல் மாநகராட்சி மன்றம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 75 km2 (29 sq mi) |
| ஏற்றம் | 28 m (92 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 3,75,463 |
| • அடர்த்தி | 15,644/km2 (40,520/sq mi) |
| இனம் | பல்வேல்கர் |
| மொழிகள் | |
| • ஆட்சி் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 410206/ 410217/ 410208 |
| தொலைபேசிக் குறியீடு | 022 |
| வாகனப் பதிவு | MH-46 |
பன்வேல், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தின் பன்வேல் தாலுகா மற்றும் பன்வேல் மாநகராட்சியின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இதனருகே புது பன்வேல் நகரம் உள்ளது. இது மும்பை - பெங்களூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
தொழில்துறை
இங்கு லார்சன் அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி ஆகியன அமைந்துள்ளன. இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வரவிருக்கின்றன.
போக்குவரத்து
இங்கு தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த நிலையத்துடன் மும்பை புறநகர் ரயில்வேயின் துறைமுக வழித்தடம் முடிவடைகிறது.
இங்கு மும்பை - புனே விரைவுச்சாலை, சியாந்பன்வேல் விரைவுச்சாலை ஆகியன இணைகின்றன.
நவி மும்பையில் சர்வதேசத் தரத்திலான விமான நிலையம் வரவிருக்கிறது.