பாத்சாலா
பாத்சாலா (Pathsala), இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டத்தில் அமைந்த பஜாலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது அசாம் மாநிலத் தலைநகரான திஸ்பூருக்கு வடமேற்கே 111 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.
பாத்சாலா | |
|---|---|
மாவட்டத் தலைமையிடம் | |
பாத்சாலா is located in அசாம் பாத்சாலா இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பாத்சாலாவின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 26°29′58″N 91°10′45″E / 26.499382°N 91.179271°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | அசாம் |
| மாவட்டம் | பஜாலி மாவட்டம் |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | பாத்சாலா நகராட்சி மன்றம் |
| • வார்டுகள் | 10 |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2.74 km2 (1.06 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 11,242 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | அசாமிய மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 781325 |
| தொலைபேசி குறியீடு | 91-3666 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
| வாகனப் பதிவு | AS |
| இணையதளம் | https://bajali.assam.gov.in/ |
போக்குவரத்து
பாத்சாலா பாத்சாலா தொடருந்து நிலையத்திலிருந்ஹு திஸ்பூர், குவகாத்தி, போங்கைகாவொன், ரங்கியா, பார்பேட்டா ரோடு, அலிப்பூர்துவார், கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4 வார்டுகளும், 2759 குடும்பங்களும் கொண்ட பாத்சாலா நகரத்தின் மக்கள் தொகை 11242 ஆகும். அதில் 5824 ஆண்கள் மற்றும் 5418 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1040 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.21% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3.11% மற்றும் 1.89% வீதம் உள்ளனர். [2]
மேற்கோள்கள்
- ↑ Indian Railways Data "Pathsala Station Stoppages for NFR "
- ↑ Pathsala Town Population 2011