பாபட்லா - 2295
பாபட்லா - 2295 (BPT 2295) முன்மொழிவு எண்: (IET 22188) எனப்படும் இந்த நெல் வகை, பாபட்லா - 1768 மற்றும் NLR 33641 ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, பாபட்லா மசூரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
| பாபட்லா - 2295 BPT 2295 |
|---|
| வேளாண் பெயர் |
| பாபட்லா மசூரி |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பாபட்லா - 1768 X NLR 33641 |
| வகை |
| கலப்பின நெல் வகை |
| காலம் |
| 150 - 155 நாட்கள்[1] |
| மகசூல் |
| 6500 - 7000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2018 |
| வெளியீட்டு நிறுவனம் |
| CVRC / SVRC, பாபட்லா[2] |
| மாநிலம் |
| ஆந்திரப் பிரதேசம்[3] |
| நாடு |
காலம்
நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 150 - 155 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா சாகுபடி பருவத்தில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, ஒற்றை போகப் பயிர் சாகுபடிக்கு உகந்த இந்நெல் இரகம், தாழ்வான நிலப் பகுதிகளான கிருஷ்ணா மாவட்டத்தில் பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[1]
மகசூல்
பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH) மற்றும் பாக்டீரியா இலை கருகல் (BLB) ஆகிய இரண்டிற்கும் எதிர்ப்புத்திறன் கொண்ட பாபட்லா - 2295, ஒரு எக்டேருக்கு சுமார் 6,500 முதல், 7000 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 7 - 10 நாட்கள் வெள்ளத்தில் மூழ்கினாலும் ஒரு வாரத்திற்கு விதை முளைக்காத தன்மை கொண்டதாகவும், இதன் அரிசி உறையாத மற்றும் உடையாத, நடுத்தர நல்ல சமையல் தரத்துடன் கூடிய மெல்லிய, ஒளி ஊடுருவக்கூடிய தானிய வகையாக உள்ளதாக கருதப்படுகிறது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Bapatla Mahsuri (BPT 2295)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-19.
- ↑ Paddy varieties released from Agricultural Research Station, Bapatla
- ↑ List of released varieties/hybrids of cereals Indian Council of Agricultural Research