பாயும் புலி (2015 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாயும் புலி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சுசீந்திரன்
திரைக்கதைசுசீந்திரன்
இசைதி. இமான்
நடிப்புவிசால்
காசல் அகர்வால்
சூரி
சமுத்திரக்கனி
ஒளிப்பதிவுவேலுராசு
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்வேந்தர் மூவீசு
விநியோகம்எசுக்கேப்பு ஆட்டிட்சு மோசன் பிட்சர்சு (Escape Artists Motion Pictures)
வெளியீடு4 செப்டம்பர் 2015 (2015-09-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு250 மில்லியன் (US$3.1 மில்லியன்)[1]

பாயும் புலி (Paayum Puli) என்பது 2015இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] சுசீந்திரன் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[3][4] இத்திரைப்படத்தில் விசால், காசல் அகர்வால் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[5] திரைப்படத்திற்கான இசையைத் தி. இமான் வழங்கியுள்ளார்.[6] 2015 செட்டம்பர் 4ஆம் நாள் பாயும் புலி வெளிவந்தது.[7] அதே நாளிலேயே, செயசூர்யா (Jayasurya) என்ற பெயரில் இத்திரைப்படம் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[8]

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
விசால் செயசீலன்
காசல் அகர்வால் சௌமியா
சமுத்திரக்கனி செல்வம்
சூரி முருகேசன்
அரிசு உத்தமன் ஆல்பட்டு
ஆர். கே.
ஐசுவர்யா தத்தா திவ்யா
செயப்பிரகாசு
முரளி சருமா இலால்
ஆனந்து இராசு மணிகண்டன்
நிக்கிதா துக்கிரல் சிறப்புத் தோற்றம்

[9]

பாடல்கள்

பாயும் புலி
ஒலிப்பதிவு
வெளியீடு2 ஆகத்து 2015
ஒலிப்பதிவு2015
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்35:44
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்வி மியூசிக்கு
இசைத் தயாரிப்பாளர்தி. இமான்
தி. இமான் காலவரிசை
'உரோமியோ சூலியட்டு
(2015)
பாயும் புலி 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
(2015)

தி. இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[6] 2015 ஆகத்து 2ஆம் நாள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பை வி மியூசிக்கு வெளியிட்டது.[6] பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் 2.75 விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.[10]

# பாடல்வரிகள்பாடகர் நீளம்
1. "புலி புலி பாயும்புலி"  வைரமுத்துமால்குடி சுபா 4:46
2. "மருதக்காரி"  வைரமுத்துதிவாகர் 4:24
3. "நா சூடான மோகினி"  வைரமுத்துசோதி நூரன் 4:44
4. "யார் இந்த முயல் குட்டி"  வைரமுத்துஅருமான் மாலிக்கு 4:03
5. "மருதக்காரி (வெற்றிசை)"     4:24
6. "சிலுக்கு மரமே"  தமிழ்: வைரமுத்து
ஆங்கிலம்: சாசா, முரளிதர்
திவ்யா குமார், சாசா 4:40
7. "யார் இந்த முயல் குட்டி (வெற்றிசை)"     4:03
மொத்த நீளம்:
31:04

[6]

சச்சரவு

பாயும் புலி இசை வெளியீடும் புலி இசை வெளியீடும் ஒரே நாளில் இடம்பெற்றது.[11] தனது கீச்சில் "வெறும் புலி இல்லடா பாயும் புலி ஆடியோ இரிலீசு டா. இது 'நட்சு' எடுக்காத புலி டா" என்று ஆர்யா குறிப்பிட்டது விசயின் சுவடர்களிடம் சலசலப்பை உருவாக்கியது.[11]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Shekhar H. Hooli (3 செப்டம்பர் 2015). "Box Office Prediction: 'Dynamite', 'Bhale Bhale Magadivoy', 'Jayasurya' Set to Clash this Week". IBT. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  2. "Paayum Puli (2015)". IMDb. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  3. "சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'பாயும் புலி'". தி இந்து. 25 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  4. கா. இசக்கி முத்து (1 செப்டம்பர் 2015). "திருட்டு விசிடியை வேடிக்கை பார்த்தால் திரையுலகமே அழிந்துவிடும்: விஷால் நேர்காணல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  5. "பாயும் புலி". தினமலர் சினிமா. 16 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  6. 6.0 6.1 6.2 6.3 "Paayum Puli". Saavn. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  7. ஸ்கிரீனன் (4 செப்டம்பர் 2015). "'பாயும் புலி' விவகாரம்: பிரச்சினையை பேசி தீர்த்த விஷால்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  8. Shyam. "Jayasurya Movie First Day collections: 1st day Box Office collection Report Worldwide". The Indian Talks. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  9. "Paayum Puli (2015) Full Cast & Crew". IMDb. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  10. "Paayum Puli Songs Review". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
  11. 11.0 11.1 "வெறும் 'புலி' இல்லடா 'பாயும் புலி' டா-ட்விட்டரில் ஆர்யா சீண்டல்!". சினிமா விகடன். 3 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.

வெளியிணைப்புகள்