பாரன்கீட் 88
| படிமம்:Fahrenheit 88.jpg | |
| இருப்பிடம்: | 179 காடிங் சாலை, புக்கிட் பிந்தாங், கோலாலம்பூர், |
|---|---|
| அமைவிடம் | 3°08′51″N 101°42′45″E / 3.1475°N 101.7125°E |
| திறப்பு நாள் | 8 ஆகத்து 2010 |
| முகாமை | கோலாலம்பூர் பெவிலியன் |
| உரிமையாளர் | மக்னா முஜூர் பெர்காட் |
| கடைகள் எண்ணிக்கை | 280 |
| மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 300,000 சதுர அடிகள் (28,000 m2) |
| தள எண்ணிக்கை | 5 + 3 கீழ் தளங்கள் |
| வலைத்தளம் | www |
பாரன்கீட் 88 (மலாய்; ஆங்கிலம்: Fahrenheit 88) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் நகர மையப் பகுதியில் உள்ள பேரங்காடி ஆகும். விரிவான புதுப்பித்தலுக்குப் பிறகு ஆகத்து 2010-இல் பாரன்கீட் 88 கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது. கோலாலம்பூர் பெவிலியன் பேரங்காடியை நிர்வகிக்கும் அதே நிறுவனம், பேரங்காடியின் மேலாண்மையையும் மற்றும் குத்தகையையும் கையாள்கிறது.
வரலாறு
பாரன்கீட் 88 கட்டிடம்; முன்னர் கேஎல் பிளாசா (KL Plaza) என்று அழைக்கப்பட்டது; மற்றும் பெர்ஜெயா குழுமத்தின் (Berjaya Corporation) பெர்ஜெயா லெய்சர் பெர்காட் (Berjaya Leisure Berhad) துணை நிறுவனத்திற்குச் சொந்தமானது.[1]
2007-ஆம் ஆண்டில், பெர்ஜெயா குழுமம் கேஎல் பிளாசா கட்டிடத்தை பெவிலியன் குழுமத்திற்கு மொத்தம் RM 470 மில்லியன் மதிப்பில் விற்றது. இந்த விற்பனையில் 5 மாடி கடைவல மேடையை RM 425 மில்லியனுக்கும்; பேரங்காடிக்கு மேல் இருந்த 59 அடுக்குமாடி வீடுகள் RM 45 மில்லியனுக்கும் விற்பனை செய்யப்பட்டன.[2]
புக்கிட் பிந்தாங் நகர மையம்
புக்கிட் பிந்தாங் நகர மையம் (Bukit Bintang City Centre) (BBCC) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், புடு சிறைச்சாலையின் முன்னாள் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கலப்பு-பயன்பாட்டுப் பகுதி ஆகும். 19.4 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட இந்த வளர்ச்சிப் பகுதி, புக்கிட் பிந்தாங்கின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது.
பிபிசிசி (BBCC) எனும் சுருக்கம், புக்கிட் பிந்தாங் நகர மையம் (Bukit Bintang City Centre) என்பதைக் குறிப்பதாகும். 20 சூன் 2017-இல், புக்கிட் பிந்தாங் நகர மையம் மற்றும் லாலாபோர்ட் மிட்சுயி வணிகப் பூங்கா கட்டுமானத்திற்கான (Mitsui Shopping Park LaLaport Bukit Bintang City Centre) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர் 2018 மார்ச் மாதம், RM 8.7 பில்லியன் ரிங்கிட் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடக்கப்பட்டன.[3]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Larut Tin clarifies situation at Printemps KL Plaza". Business Times (Singapore). 9 March 1987. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/biztimes19870309-1.2.34.2?qt=kl,%20plaza&q=kl%20plaza.
- ↑ "Anchor tenant Mun Loong to pull out of KL Plaza". The Straits Times. 5 June 1996. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/straitstimes19960605-1.2.59.4.
- ↑ Zakariah, Zarina (2017-06-20). "Construction begins on highly-anticipated Bukit Bintang City Centre | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Retrieved 2021-10-22.