பாவக்காய் மண்டபம்
Jump to navigation
Jump to search
பாவாக்காய் மண்டபம் என்பது மதுரை வில்லாபுரத்தில் அமைந்துள்ள கோயில் மண்டபம் ஆகும். இங்கு சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் விழா நடைபெறுகிறது. திருவிழாவின் நான்காம் நாள் காலையில் மீனாட்சியம்மன் கோயிலிருந்து, மீனாட்சியம்மன், சோமசுந்தேரஸ்வர் சிலைகள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, கிழக்கு சித்திரை வீதி, தெற்காவனி மூல வீதி, மறவர் சாவடி, சின்னக்கடைத் தெரு, தெற்கு வாசல் வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாவாக்காய் மண்டபத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
பாவாக்காய் மண்டகப்படியில் சிறப்பு அபிசேகங்கள் முடிந்த பின் பட்டுத் துணிகளால் அலங்கரிக்கப்படும். பின்னர் மாலையில் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் மீண்டும் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, இரவு ஒன்பது மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எழுந்தருளுகின்றனர்.[1]