பிரகலாதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரஹ்லாதா
பிரஹ்லாதா திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி
இயக்கம்பி. என் ராவ்
தயாரிப்புசேலம் சங்கர்
கதைடி. சி. வடிவேலு நாயக்கர்
இசைஷர்மா சகோதரர்கள்
நடிப்புடி. ஆர். மஹாலிங்கம், எம். ஆர். சந்தானலட்சுமி, ஆர். பாலசுப்ரமணியம், எம். ஜி. ஆர், என். எஸ். கே. டி.ஏ. மதுரம்
விநியோகம்சேலம் சங்கர் பிலிம்ஸ்
வெளியீடு12 டிசம்பர் 1939
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரகலாதா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது.

விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன், பிரகலாதனின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில், எம். ஜி. ஆர் இந்திர கடவுள் வேடத்தில் நடித்திருந்தார்.[1] இது எம். ஜி. ஆரின் ஆறாவது படமாகும். மேலும் இதில், எம். ஜி. ஆர்க்கும் சந்தானலக்சுமிக்கும் இடையே ஒரு கத்தி சண்டை காட்சி இடம்பெற்றிருந்தது.[2]

நடிகர்கள்

தயாரிப்பு

சேலம் சங்கர் பிலிம்சு மற்றும் சென்ட்ரல் ஸ்டுடியோசு கோவை ஆகிய இருநிறுவனங்களும் இப்படத்தை தயாரித்தன. இந்தத் திரைப்படத்தின் கதை, வசனம் மலையாள பாதிப்பை ஒட்டி எழுதப்பட்டது. இந்தப் படத்தின் மலையாளப் பாதிப்பிற்கு கதை வசனத்தை என். பி. செல்லப்பன் நாயர் எழுதினார். இப்படம் வணிக ரீதியாக ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.[3][4]

மறு-ஆக்கங்கள்

முதலில் தெலுங்கு மொழியில் 'பக்த பிரகலாதா' என்ற பெயரில் 1939 யில் வெளியானது. பின்னர், 1942-யில் அதேபெயருடன் மறுஆக்கம் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, வங்காளம், அசாமிய மொழி, இந்தி மற்றும் பல மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட முறை இப்படம் மறுஆக்கம் செய்யப்பட்டு பெரும்பாலும் வெற்றிப்படமாகவே அமைந்தது.

மேற்கோள்கள்

  1. [State and politics in India. 372: Oxford University Press. 1998. ISBN 978-0-19-564765-5 இந்திய மாநிலம் மற்றும் அரசியல்]. {{cite book}}: Check |url= value (help)
  2. "தி ஹிந்து". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2019-04-03.
  3. "தி ஹிந்து". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2019-04-03.
  4. "தி ஹிந்து".

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரகலாதா&oldid=35561" இருந்து மீள்விக்கப்பட்டது