பிரபாவதி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரபாவதி
பிரபாவதி பாட்டுப்புத்தக முன்னட்டை
பிரபாவதி பாட்டுப்புத்தக முன்னட்டை
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புலேனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்சு
நடிப்புசி. ஒன்னப்ப பாகவதர்
எஸ். பி. எல். தனலட்சுமி
கலையகம்நியூட்டோன்
விநியோகம்முருகன் டாக்கீசு
வெளியீடு6, 1944 (1944-ஆகத்து-06)
நீளம்16686 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரபாவதி (Prabhavathi) 1944 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் இந்துத் தொன்மவியல் திரைப்படம் ஆகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் லேனா செட்டியார் தயாரித்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், எஸ். பி. எல். தனலட்சுமி, டி. ஆர். ராஜகுமாரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

திரைக்கதை

இந்துக் கடவுளான கிருட்டிணன் (எம். எஸ். சரோஜா), அவரது மகன் பிரத்யும்னன் (சி. ஹொன்னப்ப பாகவதர்), முனிவர் நாரதர் (கே. மகாதேவ ஐயர்) மற்றும் நாரதரின் குறும்புச் செயல்கள், பிரத்யும்னன் ஒரு முனிவரால் சபிக்கப்பட்டு பெண்ணாக மாறியது, கிருட்டிணனின் ஈடுபாட்டினால் பிரத்யும்னன் சாபத்தில் இருந்து விடுபடுவது, பிரத்யும்னன் எப்படி அவரது காதலி மாயாவதியுடன் (டி. ஆர். ராஜகுமாரி) மீண்டும் இணைகிறார் என்பதே திரைக்கதை ஆகும்.[1][2]

நடிக, நடிகையர்

நடிகர்கள்[2]
நடிகர் பாத்திரம்
சி. ஹொன்னப்ப பாகவதர் பிரத்திம்யும்மனன்
என். எஸ். கிருஷ்ணன் அரிதாசு
கே. மகாதேவ ஐயர் நாரதர்
ஆர். பாலசுப்பிரமணியம் துர்வாசர்
டி. பாலசுப்பிரமணியம் வச்சிரநாபன்
எம். இலட்சுமணன் இந்திரன்
டி. ஆர். இராமச்சந்திரன் பத்ரநாதன்
டி. வி. நமசிவாயம் விசுவாமித்திரர்
வி. கிருஷ்ணன் இலட்சுமணன்
எஸ். வி. சகஸ்ரநாமம் சிவன்
எஸ். ஆர். சுவாமி பிரம்மன்
ஈ. ஆர். சகாதேவன் சுநாபன்
வேலாயுதம் கும்பநாபன்
கொளத்து மணி பூசாரி

இவர்களுடன் புளிமூட்டை ராமசாமி, திருவேங்கிடம், குப்புசாமி, சங்கரமூர்த்தி, செல்லமுத்து, கிருஷ்ணமூர்த்தி, சின்னச்சாமி, கோபால் ஆகியோர் அசுரர்களாக நடித்திருந்தனர்.[2]

நடிகைகள்
நடிகை பாத்திரம்
எஸ். பி. எல். தனலட்சுமி பிரபாவதி
டி. ஆர். ராஜகுமாரி மாயாவதி
எம். எஸ். சரோஜா கிருட்டிணன்
டி. ஏ. மதுரம் சித்திரலேகா
டி. எஸ். கிருஷ்ணவேணி ருக்மணி
பி. ஏ. பெரியநாயகி குறத்தி
பி. ஏ. ராஜாமணி சத்தியபாமா
ஏ. ஆர். சகுந்தலா அகலிகை
கே. ஆர். செல்லம் சக்தி
ஆர். பத்மா ராஜகம்சி
ரெத்தினம் இந்திராணி

இவர்களுடன் நடனமாதர்களாக டி. ஏ. ஜெயலட்சுமி, கே. ஆர். ஜெயலட்சுமி, கே. எஸ். ஆதிலட்சுமி, கே. எஸ். ராஜம், எஸ். சரசுவதி, வி. எஸ். சிட்டி அம்மாள், ஆர். என். தனபாக்கியம் ஆகியோரும், துணை நடிகைகளாக டி. டி. கிருஷ்ணாபாய், டி. டி. கமலாபாய், பி. எஸ். சந்திரா, வி. லட்சுமிகாந்தம் ஆகியோரும் நடித்திருந்தனர்.[2]

தயாரிப்பு

பிரபாவதி டி. ஆர். ரகுநாத்தினால் இயக்கப்பட்டு எஸ். எம். லெட்சுமணன் "லேனா" செட்டியாரின் கிருஷ்னா பிக்சர்சின் தயாரிப்பில் வெளிவந்தது. கிருட்டிணன் என்ற ஆண் பாத்திரத்தில் டி. ரகுநாத்தின் மனைவி எம். எஸ். சரோஜா நடித்திருந்தார். கொன்னப்ப பாகவதர் பிரதியும்னன் என்ற முக்கிய பாத்திரத்திலும், டி. ஆர். ராஜகுமாரி பிரதியும்னனின் காதலி மாயாவதியாகவும் நடித்தனர். டி. ஆர். ராஜகுமாரியின் அத்தை எஸ். பி. எல். தனலட்சுமி பிரபாவதியாகவும், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நகைச்சுவைக் காட்சிகளிலும் நடித்தனர்.[1][2]

வெளியீடும் வரவேற்பும்

பிரபாவதி முருகன் டாக்கீசினால் வெளியிடப்பட்டது.[3] இந்தத் திரைப்படம் வணிகரீதியாக வெற்றிபெறாவிடினும், "கவர்ச்சிப் பெண்ணான ராஜகுமாரியின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் ஒன்றாக இது நினைவுகூரப்படும்" என திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை கூறுகிறார்.[1]

பாடல்கள்

எண். பாடல் பாடியோர் நீளம் (நி:செ)
1 "ஜெகதாம்பிகையே ஜெகதாம்பிகையே" எஸ். பி. எல். தனலட்சுமி 02:47
2 "நீயேதுணை தேவாதி தேவா" கே. மகாதேவன் ஐயர்
3 "நல்லோர் மணிந்திட உள்ளங் கனிந்திடும்" கே. மகாதேவன் ஐயர்
4 "வருவாரே வருவாரே" டி. ஆர். ராஜகுமாரி
5 "எங்கும் எப்பொxஉதும் விளையாட்டா" கொன்னப்ப பாகவதர், கே. மகாதேவன் ஐயர், டி. ஆர். ராஜகுமாரி
6 "கார்த்திகை விளக்கு மாகாளியம்மனுக்கு" டி. ஏ. மதுரம்
7 "ஓடோடி வசந்தம் பூவோடு சம்பந்தம்" டி. ஆர். ராஜகுமாரி, கொன்னப்ப பாகவதர்
8 "காணாத காட்சி கண்டேன் - கண்" எஸ். பி. எல். தனலட்சுமி 02:20
9 "கோமாதா நீயே ஆதாரமே" டி. ஆர். ராஜகுமாரி
10 "திருவடி மலராலே ஏழை" ஏ. ஆர். சகுந்தலா நாடகமேடை
11 "மாதிவள் யார் சொல்லும் மாதவமே" பின்னணி இசை (இராமர்) நாடகமேடை
12 "வனிதையிவள் கௌதமன் மனைவிராமா" டி. வி. நமசிவாயம் நாடகமேடை
13 "உசிர வாங்காதே யிந்த ஒடம்பு தாங்காதே" என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் 02:50
14 "நிலவோ அலாது முகமோ" கொன்னப்ப பாகவதர், எஸ். பி. எல். தனலட்சுமி
15 "மாரன் வருகிறான் - சுகுமாரன் வருகிறான்" நடன மாதர்
16 "மருமாலிகை சூடும்திருமால் மகன் இங்கே" டி. ஆர். ராஜகுமாரி
17 "திருமாது வளர் பொன்னாடு என்நாடு துவாரகையே" பி. ஏ. பெரியநாயகி
18 "வெள்ளிமலைக் கெதிராய் விளங்கும் ஏழுமலை" பி. ஏ. பெரியநாயகி 02:50
19 "சந்திரவதனா எந்தன்மதனா" எஸ். பி. எல். தனலட்சுமி, கொன்னப்ப பாகவதர்
20 "ஏன் தடுமாருகின்றாய் - ஏழைமனமே" கே. மகாதேவன் ஐயர் 02:24
21 "சித்தமிரங்காதா மாதா" கொன்னப்ப பாகவதர் 02:45
22 "வானவர்கள் துயர்தீர" கொன்னப்ப பாகவதர்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 கை, ராண்டார் (10 திசம்பர் 2011). "Prabhavathi 1942". தி இந்து. Archived from the original on 17 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 பிரபாவதி பாட்டுப்புத்தகம். Krishnan Pictures. 1944.
  3. "Prabhavathi". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 6 August 1944. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19440806&printsec=frontpage&hl=en. 
"https://tamilar.wiki/index.php?title=பிரபாவதி_(திரைப்படம்)&oldid=35571" இருந்து மீள்விக்கப்பட்டது