பீகார் நாள்
| பீகார் தினம் 𑂥𑂱𑂯𑂰𑂩 𑂠𑂱𑂫𑂮 | |
|---|---|
| பிற பெயர்(கள்) | பீகார் தினம், பீகார் நிறுவிய தினம் |
| கடைப்பிடிப்போர் | பீகார், இந்தியா |
| வகை | State |
| தொடக்கம் | 22 மார்ச், 1912 |
| நாள் | 22 மார்ச் |
| நிகழ்வு | ஆண்டுதோறும் |
பீகார் தினம் (𑂥𑂱𑂯𑂰𑂩 𑂠𑂱𑂫𑂮)[1] என்பது பீகார் மாநிலம் உருவானதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாளாகும். 1912 ஆம் ஆண்டு இதே நாளில் வங்காள மாகாணத்திலிருந்து இந்த மாநிலத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.[2][3] இந்த நாள் பீகாரில் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4] நிதிஷ்குமார் ஆட்சிக்காலத்தில் பீகார் தினம் பீகார் அரசாங்கத்தால் துவங்கப்பட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவைத் தவிர அமெரிக்க ஐக்கிய நாடு , ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி[5], இசுக்கொட்லாந்து[6], ஆத்திரேலியா, கனடா, பகுரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ, மற்றும் மொரிசியசு போன்ற நாடுகளிலும் பீகார் தினம் கொண்டாடப்படுகின்றது]].[7]
கடைபிடித்தல்
பீகார்அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் நாளை பீகார் தினமாக கொண்டாடுவதற்கான அறிவிப்பினை வெளியிடுகிறது. இந்த விடுமுறை மத்திய மற்றும் மாநில அரசு அதிகார வரம்பில் வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதே போல் பள்ளிகளில் இந்த நாளை மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடுகின்றனா்.
மேற்கோள்கள்
- ↑ "बिहार दिवस विशेष: ऐसे अस्तित्व में आया अपना बिहार, ...जानें". Wire Khabar (in Hindi). 2025-03-22. Retrieved 2025-08-16.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Stage set for 105th Bihar Diwas".
- ↑ "Bihar Diwas: Sunidhi Chauhan to perform at Gandhi Maidan on Mar 22".
- ↑ "Bihar Diwas marks public Holiday in Bihar". news.biharprabha.com. Retrieved 22 March 2014.
- ↑ "26 मई को जर्मनी में मनेगा बिहार दिवस, ...जानिए". Live Bihar News | लाइव बिहार न्यूज़ (in இந்தி). 2018-03-30. Archived from the original on 2019-09-22. Retrieved 2019-09-22.
- ↑ "सात समंदर पार स्कॉटलैंड के पटना में कुछ इस तरह मनाया गया बिहार दिवस", Live Bihar News | लाइव बिहार न्यूज़ (in இந்தி), 2018-03-21, archived from the original on 2018-03-21, retrieved 2018-03-21
- ↑ "Bihar Day to be celebrated in seven countries". news.biharprabha.com. Retrieved 22 March 2014.