புஸ்சி ஆனந்த்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
என். ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 பெப்ரவரி 2024
தலைவர்விஜய்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில்
11 மே 2006 – 13 மே 2011
முன்னையவர்அன்னிபால் கென்னடி, திராவிட முன்னேற்றக் கழகம்
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
தொகுதிபுஸ்சி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சூலை 1964 (1964-07-18) (அகவை 61)
புதுச்சேரி (காரைக்கால்)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதமிழக வெற்றிக் கழகம் (2024 - இன்று வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ்
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
பெற்றோர்
  • டி. நாராயணசாமி (தந்தை)
முன்னாள் மாணவர்கால்வ் கல்லூரி, புதுச்சேரி
பணிஅரசியல்வாதி
புனைப்பெயர்புஸ்சி ஆனந்த்

என். ஆனந்த் (Bussy N. Anand) என்பவர் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆனந்த் புதுச்சேரி காங்கிரசு அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அஷ்ரபின் உதவியாளராகவும் இருந்தவர். ஆனந்த் முதலில் புதுச்சேரி மாநில விஜய் இரசிகர் மன்ற கௌரவத் தலைவராக இருந்து, பிறகு தலைவராக மாறினார். 2006 ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், புஸ்சி சட்டமன்றத் தொகுதியில், புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] இதன் பிறகு, ஆனந்த் அகில இந்திய விஜய் இரசிகர் மன்றப் பொறுப்பாளராக உயர்ந்தார்.[3]

விஜய் துவக்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் ஆனந்த் உள்ளார்.[4]

போட்டியிட்ட சட்டமன்றத் தொகுதிகள்

தேர்தல் தொகுதி கட்சி முடிவுகள் வாக்கு சதவிகிதம் எதிர்த்துப் போட்டியிட்டவர் எதிர்த்துப் போட்டியிட்ட கட்சி எதிர்த்துப் போட்டியிட்டவர் வாக்கு விகிதம் குறிப்புகள்
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2006 புஸ்சி சட்டமன்றத் தொகுதி புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் வெற்றி 54.06 அன்னிபால் கென்னடி திராவிட முன்னேற்றக் கழகம் 43.55 [2]
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2011 உப்பளம் சட்டமன்றத் தொகுதி சுயேச்சை தோல்வி 28.28 ஏ.அன்பழகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 42.59
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 உப்பளம் சட்டமன்றத் தொகுதி அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் தோல்வி 20.07 ஏ. அன்பழகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 39.95

மேற்கோள்கள்

  1. "Puducherry 2006". Election Commission of India. Archived from the original on 25 September 2021.
  2. 2.0 2.1 "Pondicherry: PMC wins from Bussy, Cassicade constituency". Times of India. 11 May 2005.
  3. யார் இந்த புஸ்ஸி ஆனந்த்.. விஜய்யை ஆட்டி படைக்கிறாரா.. என்ன சொல்ல வருகிறார் எஸ்.ஏ.சி? ஒன்இந்தியா, November 9, 2020
  4. மலர், மாலை (2024-09-02). "திட்டமிட்ட தேதியில் தவெக மாநாடு- புஸ்சி ஆனந்த்" (in ta). https://www.maalaimalar.com/news/state/tamilaga-vettri-kazhagam-conference-on-scheduled-date-says-bussy-anand-736689. 
"https://tamilar.wiki/w/index.php?title=புஸ்சி_ஆனந்த்&oldid=445683" இலிருந்து மீள்விக்கப்பட்டது