பெருங்கண்ணனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பெருங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல்கள் இரண்டு உள்ளன.
அவை: குறுந்தொகை 289, 310.

பாடல் சொல்லும் செய்தி

"மழை மான்றுபட்டன்று"

அவர் திறமா? தந்திறமா?

மழை மான்றது (மழை பொழிய வானம் இருண்டுவருகிறது).
அவர் சொன்ன இந்தப் பருவத்தில் அவரே வரவில்லையே என்று நான் கவலைப்படவில்லை.
அவரைப் பேணி வளர்த்த பெருமக்கள் தாம் நன்கு வளர்க்காமைக்காக வருந்துகிறார்களே! அந்த ஊர்ப் பெருமக்களுக்காகத் தான் நான் கவலைப்படுகின்றேன்.
அவர் திறத்துக்காகக் கவலைப்படவில்லை. பெருமக்கள் தம் திறத்துக்காக் கவலைப்படுகிறேன்.
இவ்வாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
குறுந்தொகை 289

இன்னும் உளனே தோழி

திருமணத்துக்குக் காலம் தாழ்கிறது. கிழத்தி தோழியிடம் சொல்கிறாள்.
மாலை வருகிறது. புள்ளும் புலம்புகின்றன. பூவும் கூம்புகிறது. கானலும் புலம்புகிறது. வானமும் நம்மைப் போல் மயக்கம் கொண்டு இருள்கிறது. இன்னும் இருக்கிறேனே! இந்த நிலையை ஞாழல் பூக்கும் என் துறைவனுக்கு யாராவது சொல்லக்கூடாதா?
குறுந்தொகை 310

ஓமை நிழல்

நெஞ்சே! இவளைப் பிரிந்து கானம் செல்லும் வல்லமை உனக்கு இருக்கிறதா? அங்கே அகன்ற அருவி இருக்கும். நீர் இருக்காது. நிழல் இருக்கும். அது களிறு தன் பிடிக்கு ஒடித்துத் தந்த ஓமை மர நிழலாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அவளைப் பிரிந்து செல்வதைக் கைவிடுகிறான்.
நற்றிணை 137
"https://tamilar.wiki/index.php?title=பெருங்கண்ணனார்&oldid=12606" இருந்து மீள்விக்கப்பட்டது