பொருநராற்றுப்படை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.[1] முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்தஆசிரியப்பாவாலானது.இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.

நூல் விபர அட்டவணை[2]
நூல் பொருநராற்றுப்படை
ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார்
பாட்டுடைத்தலைவன் கரிகால் பெருவளத்தான்
திணை பாடாண்
துறை ஆற்றுப்படை
பாவகை ஆசிரியப்பா
அடிகள் 248

பொருநராற்றுப்படை அமைப்பு

பொருநன் போகும் வழி[3] (1 முதல் 13 வரை), பாடினி மகிழப் பாடும் பாணன் (16 முதல் 30 வரை), நாயின் நாக்கு போன்ற காலடி (31 முதல் 45 வரை), கல்லில் நடக்காதே கால் புண்ணாகும் (46 முதல் 59 வரை), அடியா வாயில் அடைக நீயும் (60 முதல் 75 வரை), என் வருத்தம் தீர வாரி வழங்கினான்(76 முதல் 90 வரை), இரவு பகல் தெரியாது இருந்தேன் நான் (95 முதல் 105 வரை), ஏர் உழுவது போல சோறுழுத எங்கள் பற்கள் (106 முதல் 120 வரை), பரிசு மழையில் நனைந்தோம் (121 முதல் 135 வரை), வெண்ணிப் பறந்தலை வென்றவன் (136 முதல் 150 வரை), தாயினும் மிகுந்த அன்போடு (151 முதல் 165 வரை), தேர் ஏற்றி அனுப்ப தெருவரைக்கும் வருவான் (166 முதல் 177 வரை), மயிலாடும் மருத நிலம் (178 முதல் 194 வரை), வண்டு பாட மயிலாடும் (195 முதல் 213 வரை), செங்கோல் வழுவாச் செல்வன் கரிகாலன் (214 முதல் 231 வரை), பூவிரிக்கும் காவிரி வளம் (232 முதல் 248 வரை) என்று 248 வரிகளில் இந்நூலின் கருத்து கட்டமைக்கப்படுகிறது.

பொருநராற்றுப்படை சிறப்புகள்

தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து காலில் ஏழடிப் பின்சென்று(பொரு.166)என்னும் பாடல் வரியால் அறிய ,முடிகிறது.

காலி னேழடிப் பின்சென்று கோலின்

தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு

பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்

தண்பணை தழீஇய தளரா விருக்கை[4]

பாடினியின் கேசாதி பாத வருணனை பொருநருடன் இருக்கும் பாடினி அழகு மிக்கோளாக இருந்தாள் என்று புகழ்ந்து அவளது தலை முதல் கால் வரை 19 உறுப்புகள் இதில் வருணிக்கப்பட்டுள்ளன.(பொருந:25-47). அவையாவன: கூந்தல், திருநுதல், புருவங்கள், கண்கள், வாய், பற்கள், காதுகள், கழுத்து, தோள்கள், முன்கைகள், மெல்விரல், நகங்கள், மார்பகங்கள், கொப்பூழ், நுண்ணிடை, அல்குல், தொடைகள், கணைக்கால், பாதங்கள் என்பன.

பொருநராற்றுப்படையில் உவமைகள்

நாயின் நாக்கு போன்ற காலடி[5]

பொருநனுடன் செல்லும் பாடினியின் அழகை வருணிக்கிறார் நூலாசிரியர். பாடினியின் கழுத்தோ நாணத்தால் நாணிக்கோணும். மென்முடி இருக்கும் நீண்ட முன்கையோ தோளில் அசைந்தாடும். மலை உச்சியில் பூத்த காந்தள் மலர் போலிருக்கும் அவளுடைய மெல்லிய விரல்கள், கிளியின் வாயி போலும் கூர்மையானவை அவளுடைய விரல் நகங்கள். பல மணிவடங்கள் கோத்த மேகலை அணிந்த இடையும் உடையவள் அவள். பெரிய பெண் யானையின் பெருமை உடைய துதிக்கை போல நெருங்கித் திரண்ட இரு தொடைகளையும் உடையவள். தொடையோடு பொருந்திய மயிரொழுங்குடன் கூடிய அழகிய கணைக் காலுக்கு இணையான அழகுடையது, “நாய் நாவின் பெருந்தகு சீறடி” என்ற வரியின் மூலம் ஓடி இளைத்த நாயினுடைய நாக்கைப் போன்றது அவளுடைய பாதங்கள் என்று முடத்தாமக்கண்ணியார் வருணிக்கிறார்.

பொருநனின் பசித்துன்பம்

பொருநன் கடும் பசியில் உள்ளான் அதனைப் போக்குவதற்குக் கரிகார்பெருவளத்தான் உள்ளான் என்பதை அடையா வாயில் அடைக நீயும் என்கிறார்.

“ஆடுபசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு

நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று

எழுமதி வாழி ஏழின் கிழவா!” (பொருநராற்றுப்படை 61-63)

என்ற வரிகளின் மூலம் பொருநனின் பசித்துயரம் என்பது கொல்லுகின்ற பசித்துயரால் வருந்தும் பொருநன் உன் சுற்றத்தருடன் நீண்ட நாள் பசியைப் போக்க இன்றே புறப்படு ஏழிசை யாழ் நரம்புக்கும் உரிமை உடையவனே உடனே செல்க. ஏனெனில் உன் பசி போக வேண்டுமானால் கரிகால் பெருவளத்தானைப் பார். பசித்துன்பத்தைப் பற்றிக் கூறும் ஆசிரியர், பழத்த பழமரங்களை விரும்பித்தேடிச் செல்லும் பறவைப் போலக் கரிகால் பெருவளத்தானுடைய கோட்டை அடையா வாயிலாகக் காத்துத் திறந்திருக்கும். பொருநன் கூறுகிறான், அடையா நெடுங்கதவுடைய ஆசார வாசலை அடைந்தேன். வாயிற்காவலைனைக் கேட்காமாலே உள்ளே நுழைதேன். வயிற்றுப் பசிதீர என்னுடைய வறுமை நீங்க உண்டேன். இளைத்த என்னுடல் பருத்தது. இரையுண்ட பாம்பின் உடல் போலானது. களைப்பு நீங்கிய நான், என் கையில் இருந்த கண்ணகன்ற உடுக்கையத் தட்டி இரட்டை சீர் உடைய தடாரிப் பண்ணை தாளத்திற்கு ஏற்ப இசைத்தேன். வெள்ளி முளைக்கும் வைகறைப் பொழுதில் நான் பாடத் தொடங்கு முன்பே நட்பு கொண்ட உறவினரைப் போல் கரிகால் பெருவளத்தான் என்னை வரவேற்று உபசரித்தான்.

முரவை போகிய முரியா அரிசி

கரிகாற்பெருவளாத்தானைக் கண்டு பரிசில் பெற சென்ற இடத்த பொருநனுக்குக் கிடைத்த உபசரிப்பு பற்றிக் கூறும் போது எங்கள் பற்கள் ஏர் உழுவது போல் சோறு உழுதன என்று ஞா. மாணிக்கவாசகன் குறிப்பிடுகிறார். இரும்புக் கோலில் கோர்த்து வேக வைத்த சூடான இறைச்சியை வாயின் இடதுபுறமும் வலது புறமும் மாற்றி வைத்து உண்ண ஓயாது உபசரித்தான். இதை மேலும் உண்ணுவதை வெறுத்து வேண்டாம் என்ற போது, முல்லை மொக்கு போன்ற தவிடு நீங்கிய முனை முறியாத விரல் நுனி போன்ற அரிசி சோற்றைப் போட்டுப் பொறிக்கறியோடு உண்ணவைத்தான். இதைத்தான் முரவை போகிய முரியா அரிசி[6] என்று நூலாசிரயர் குறிப்பிடுகிறார். கூர்மைப் படுத்தப்பட்ட அரிசி சோறு போட்டதைப் பெருமைப் பட பொருநன் குறிப்பிடுகிறான்.

உரை எழுதியோர்

  • வா.மகாதேவ முதலியார் உரை(1907)
  • கா.ஶ்ரீ.கோபாலாச்சாரியார் உரை
  • மொ.அ.துரையரங்கனார் திறனாய்வு உரை
  • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை(2004).
  • திருச்சிராப்பள்ளி ப.மாதேவன் (2021) [7]

இவற்றையும் பார்க்கவும்

ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்


உசாத்துணைகள்

  1. https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0063.pdf
  2. கிழவோனே, பொருநர் (2020-06-10). "பொருநராற்றுப் படை". project madurai. Archived from the original on 2020-06-10. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10. {{cite web}}: Check |first= value (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "https://www.tamildigitallibrary.in/". www.tamildigitallibrary.in (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-06-10. {{cite web}}: External link in |title= (help)
  4. கிழவோனே, பொருநர் (2020-06-10). "பொருநாற்றுப்படை". projectmadurai. Archived from the original on 2020-06-10. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10. {{cite web}}: Check |first= value (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/50 - விக்கிமூலம்". ta.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-07.
  6. முரவை, அரிசி (2020-06-10). "பொருநாற்றுப்படை மூலமும் உரையும்". googlebooks. {{cite web}}: Check |first= value (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. "பொருநராற்றுப்படை கதையுரை - TAMIL Perungkalanjiyam". www.mskpservices.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-04.

வெளியிணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=பொருநராற்றுப்படை&oldid=9834" இருந்து மீள்விக்கப்பட்டது