பொ. வேல்சாமி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பொ. வேல்சாமி

பொ. வேல்சாமி (பி. மே 12, 1951) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொம்மையா, பாப்பம்மாள் ஆகியோர் இவரின் பெற்றோர்.

கல்வி

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர் ( 1969 - 1973 ). முட்டை வணிகம் செய்து வருகிறார். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது, மணற்கேணி, மானுடம் உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1990களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய 'நிறப்பிரிகை' இதழின் ஆசிரியர் குழுவில் அ. மார்க்ஸ், து.ரவிக்குமார் ஆகியோரோடு இணைந்து இயங்கியவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம்.

எழுதியுள்ள நூல்கள்

  1. பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  2. கோவில் நிலம் சாதி [1]
  3. பொய்யும் வழுவும்
  4. வரலாறு என்பது கற்பிதம்
  5. பரதகண்ட புராதனம் (டாக்டர் கால்டுவெல் தமிழிலேயே எழுதிய வேத இதிகாசங்கள் பற்றிய விமர்சன நூலின் பதிப்பாசிரியர்)
  6. தொல்காப்பியம் இளம்பூரணர் உரை விளக்கம் கையெழுத்துப்படியின் பதிப்பாசிரியர் - 2023
  7. மதுரா விஜயம் (பள்ளியக்ரகாரம் நீ.கந்தசாமிப் பிள்ளையின் திறனாய்வுக் கட்டுரைகள்) - பதிப்பாசிரியர் 2023
  8. பழந்தமிழ் நூல்கள் நவீனமான வரலாறு (பதிப்பாசிரியர்: கா.விக்னேஷ்) 2024
  9. சோழர் ஆட்சியிலும் அடிமைகளா? (பதிப்பாசிரியர்: கா.விக்னேஷ்) 2024
  10. இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும் (பதிப்பாசிரியர்: கா.விக்னேஷ்) 2024
  11. வரலாறு என்பது கற்பிதம் (மீள் பதிப்பாசிரியர்: கா.விக்னேஷ்) 2025

இவையன்றி அ.மார்க்ஸ், து.ரவிக்குமார் ஆகியோரோடு இணைந்து பல நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார்.

விருது

  • சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி வழங்கிய சிறந்த தமிழறிஞர் விருது
  • தமிழ்நாடு அரசின் தமிழ்த் தென்றல் திரு. வி. க. விருது (2023)
  • விகடன் நம்பிக்கை விருது (2021)
  • விளக்கு இலக்கிய அமைப்பின்.(அமெரிக்கா) புதுமைப்பித்தன் நினைவு விருது - 2022
  • விஜய் டி.வி. நீயா? நானா? சிறந்த ஆளுமை விருது - 2023

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பொ._வேல்சாமி&oldid=451425" இலிருந்து மீள்விக்கப்பட்டது