மங்கொம்பு - 16 (MO 16 - Uma) முன்மொழிவு எண்: (IET - 14758) [1]எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[2] மங்கொம்பு - 6 மற்றும் பொக்காலி ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[3] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை,[4] உமா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[3]

மங்கொம்பு - 16
MO 16 - Uma
வேளாண் பெயர்
உமா (Uma)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
மங்கொம்பு - 6 X பொக்காலி
வகை
புதிய நெல் வகை
காலம்
115-120/120-135 நாட்கள்
வெளியீடு
1998
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

கேரளாவின் நெல் பருவத்தின்படி இந்நெல் இரகமானது, குறுகிய மற்றும் நடுத்தரம் என இருவேறு கால அளவில் அறுவடைக்கு தயாராவதாக கூறப்படுகிறது. முண்டகன் எனப்படும் குளிர்காலத்தில் 115 – 120 நாட்களிலும், விரிப்பு எனப்படும் இலையுதிர்ப் பருவத்தில் 120 - 135 நாட்களிலும் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[5] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் புகையான் மற்றும் பூஞ்சைக் கொல்லி இரண்டையும் எதிர்க்கும் சக்தி கொண்ட இது, சாயாத தன்மையம், 3 வாரங்கள் வரை விதை உறக்கம் கொண்டதும், மேலும் மூன்று பருவங்களுக்கும், குறிப்பாக குட்டநாடின் கூடுதல் பயிர் பருவத்திற்கும் உகந்ததாகும்.[6][7]

சான்றுகள்

  1. Indian Rice Varietal Information Name of Variety UMA (MO-16) (IET-14758)
  2. Paddy varieties of Kerala - Uma (MO 16)
  3. 3.0 3.1 "Varieties Released - MO 16-Uma". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-09-03.
  4. Varieties released/ identified MO.16 Uma 1998
  5. Kerala Agricultural University (KAU) Medium Duration - Uma (MO-16)
  6. [https://agritech.tnau.ac.in/expert_system/paddy/KLvarieties.html Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer)]
  7. "Rice Variety information Kole lands Medium duration Uma (MO-16):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-01.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_16&oldid=456443" இலிருந்து மீள்விக்கப்பட்டது