மண்டிகல்
மண்டிகல் கிராமம் Mandikal Village | |
|---|---|
| ஆள்கூறுகள்: 13°36′00″N 77°44′00″E / 13.60000°N 77.73333°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கர்நாடகம் |
| வட்டம் | சிக்கபல்லாபுரா |
| பரப்பளவு | |
| • நிலம் | 5.06 km2 (1.95 sq mi) |
| ஏற்றம் | 921 m (3,022 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 910 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 08158 |
மண்டிகல் (Mandikal) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள தற்போதைய சிக்கபல்லாபுரா வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்.2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 910 இருந்தனர்.[1] இதன் பரப்பளவு 5.06 ச.கி.மீ2
புவியியல் மற்றும் கலாச்சாரம்
இந்தக் கிராமம் பெங்களூருவிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 44 ஆகும். மண்டிக்கல் ஒரு வட்டத்தின் துணை பிரிவாகும். இங்கு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள ஒரு அரசு பள்ளி உள்ளது. ஒரு அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனமும், அதோடு பி.யூ. கல்லூரியும் கிராமத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்கள் குண்டல மண்டிக்கல், வோசஅள்ளி, பச்சேனஅள்ளி, யடகனஅள்ளி, நலபன அள்ளி, செகன அள்ளி, சிடமகல அள்ளி, யாரப்பன அள்ளி மற்றும் கம்மகுட அள்ளி ஆகியனவாகும். கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியவை இப்பகுதி மக்கள் பேசும் மொழிகளாகும். இது பிரபலமான மலையேற்ற இடமான அவுலபெட்டா மலைக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
பொருளாதாரம்
கிராமவாசிகளின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ "2011 Census of India". censusindia.gov. Archived from the original on 2015-11-13. Retrieved 13 Jun 2023.