மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 204

புலவர் பெயர் விளக்கம்

காமக்கணி

இவர் காமத்தைக் கணித்தறியும் சோதிடர். அந்தக் காலத்தில் திருமணப் பொருத்தம் இருவரும் ஒருவரை ஒருவர் எந்த அளவு விரும்புகின்றனர் என்பதைக் கணித்தறிந்தே தீர்மானிக்கப்பட்டது. (நாள், நட்சத்திரம் பார்த்து அன்று) இப்புலவர் மணமக்களின் பருவ உணர்வுகள் ஒத்துப்போதலைக் கணித்தறிந்து கூறும் கணியர்.

நப்பாலத்தன்

ஆற்றின் இரு கரையையும் இணைப்பது பாலம். அத்தம் என்பது வழி. பாலத்தன் = பாலமாக விளங்கியவன். காதலர்களின் பாலம் இவர்.

தண்ணுமை

பாடல் சொல்லும் செய்தி

போரில் அரசனுக்கு வெற்றியைத் தேடித் தந்துவிட்டோம். என்மனைவியின் தோளை நான் பெறவேண்டும். தேரை விரைந்து செலுத்துக என்று தலைவன் தன் பாகனிடம் சொல்கிறான்.

வழுதி பாசறை

வழுதியின் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவன் இவன். வழுதிக்குத்தான் இவன் வெற்றி தேடித் தந்தான்.

வாணன் சிறுகுடி

சிறுகுடி நெல்வளம் மிக்க ஊர். அவ்வூர் மக்கள் நெல் அறுக்கும்போது தண்ணுமைப் பறையை முழக்குவர். அந்தப் பறையொலியைக் கேட்டுப் பொய்கையில் மேயும் பறவைகள் பறந்து சென்று மரங்களில் புகலிடம் கொள்ளும்.

இந்தச் சிறுகுடியின் அரசன் வாணன்.