மம்சாபுரம்
Jump to navigation
Jump to search
மம்சாபுரம் கான் முகமது சாகிப் புரம் | |
|---|---|
மம்சாபுரம் நுழைவாயில் | |
| ஆள்கூறுகள்: 9°30′00″N 77°35′13″E / 9.500027°N 77.586927°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விருதுநகர் |
| வருவாய் வட்டம் | ஸ்ரீவில்லிப்புத்தூர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 52 km2 (20 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 18,635 |
| • அடர்த்தி | 360/km2 (930/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 626110 |
| வாகனப் பதிவு | TN 84 |
| இணையதளம் | http://www.townpanchayat.in/mamsapuram |
மம்சாபுரம் (ஆங்கிலம்:Mamsapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மம்சாபுரம் பேரூராட்சி 52 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 18 வார்டுகளும், 5,388 வீடுகளும், 150 தெருக்களும், 18,635 மக்கள்தொகையும் கொண்டது.[1] மம்சாபுரம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
பெயர்க் காரணம்
மருதநாயகம் அல்லது கான்சாகிப் என்கிற முகமது யூசுப்கானின் பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ Mamsapuram Population, Religion, Caste, Working Data Virudhunagar, Tamil Nadu - Census 2011
- ↑ ந.ராசையா,மாமன்னன் பூலித்தேவன்,1992,பக்கம்116