மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன (Marainthirunthu Paarkum Marmam Enna) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஆர். ராகேஷ் எழுதி இயக்கிய பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நாடக திரில்லர் திரைப்படம் ஆகும்.[1] இந்த திரைப்படத்தில் துருவா, ஐஸ்வர்யா தத்தா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே.டி. சக்கரவர்த்தி, ராதா ரவி, மனோபாலா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2] பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் அதன் வெளியீட்டிற்கு முன் தணிக்கை சிக்கல்களுக்கு உட்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஆகத்து 17 அன்று வெளியிடப்பட்டது. படம் வெளியானதும் பார்வையாளர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களைப் பெற்றது.[3]
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன | |
---|---|
இயக்கம் | ஆர். ராகேஷ் |
தயாரிப்பு | வி. மதியழகன் ஆர். ரம்யா |
கதை | ஆர் ராகேஷ் |
திரைக்கதை | ஆர். ராகேஷ் |
இசை | ஆச்சு ராஜமணி |
நடிப்பு | துருவா ஐஸ்வர்யா தத்தா சரண்யா பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | பி. ஜே. முத்தையா |
படத்தொகுப்பு | சான் லோகேஷ் |
வெளியீடு | ஆகத்து 17, 2018 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
துருவா - சப்பான்
ஐஸ்வர்யா தத்தா - பாரதி
சரண்யா பொன்வண்ணன் - சப்பானின் தாய்
ஜே.டி. சக்கரவர்த்தி - திலீப் சக்கரவர்த்தி
அருள்தாஸ்
மைம் கோபி - மட்டை
ரமா சந்திரன் துரைராஜ் - ஜீவா
ரவிராஜ்
கதைச்சுருக்கம்
படத்தின் நாயகன் சப்பான் (துருவா) எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யும் வேலைப் பார்க்கிறார். பின்னர் தங்கச்சங்கிலி பறிக்கும் கும்பலை சேர்ந்த ஒருவருடன் மோதி பின்னர் மட்டை என்பவரின் (மைம் கோபி) சிபாரிசினால் நகை பறிக்கும் கும்பலில் வேலைக்குச் சேர்கிறார். அந்த கும்பலில் நகை பறிப்பதற்கான பயிற்சி எடுக்கிறார். நன்றாக பயிற்சி பெறும் சப்பான் எதிர்பாராத விதமாக காவல்துறை உயர் அதிகாரியின் மனைவியின் தங்கச்சங்கிலி பறிக்கும் போது தடுமாறி விழுகிறார். இதனால் அவரது முகம் அடையாளம் காணப்படுகிறது. இதையடுத்து நகை பறிக்கும் கும்பலை கண்டுபிடித்து சுட்டுக் கொள்ளுமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது. சப்பான் யாரென்பதும், அவரது கடந்த கால வாழ்க்கையுமே படத்தின் மீதிக்கதை
தயாரிப்பு
ஆர். ராகேஷின் தகடு தகடு என்ற திரைப்படத்திற்கு பிறகு அவரது இரண்டாவது திரைப்படமாக இந்த திரைப்படத்தின் பணிகளை 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்தார். இந்த திரைப்படத்தை பிரபல தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையன் ஆரம்பத்தில் முதல் தயாரிப்பு முயற்சியாக தயாரிக்க இருந்தார்.[4] நிதி சிக்கல்களின் காரணமாக ஒளிப்பதிவாளராக பி.ஜி முத்தையனும் தயாரிப்பாளராக வி. மதியழகனும் பணியாற்றினார்கள்.[5] இந்த படம் பெண்களை மையமாகவும், சங்கிலி திருட்டு தொடர்பான பெண் சார்ந்த கதையை அடிப்படையாகவும் கொண்டது. 1968 ஆம் ஆண்டில் வெளிவந்த தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தின் பாடல் வரியால் ஈர்க்கப்பட்டு மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற தலைப்பு சூட்டப்பட்டது.
“பெண்ணொருவர் நகைகளை அணிந்து வழிப்பறி பற்றிய பயமின்றி நள்ளிரவில் தெருவில் தனியாக நடந்து செல்லுவதே உண்மையான சுதந்திரம் ஆகும்.”என்ற கருப்பொருளுடன் படம் தொடங்குகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு என்னூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இதன் தயாரிப்பு 2017 இல் நிறைவடைந்தது.[6] இருப்பினும் படத்தின் வெளியீடு தணிக்கை சிக்கல்கள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் தாமதமானது. 2018 ஆம் ஆண்டில் சூன் 23 அன்று இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பிரபல திரைப்பட இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் ஜெயம் ராஜா ஆகியோர் வெளியிட்டனர்.[7]
ஒலிப்பதிவு
இந்த திரைப்படத்திற்கு ஆச்சு ராஜா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை பிரபல பாடலாசிரியர் பா. விஜய் மற்றும் பாடலாசிரியர் பா.மீனாசிசுந்தரம் எழுதியுள்ளனர். இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்புகள்
- ↑ BookMyShow. "Marainthirunthu Paarkum Marmam Enna Movie (2018) | Reviews, Cast & Release Date in Ahmedabad". BookMyShow (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
- ↑ Marainthirunthu Parkum Marmam Enna Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, பார்க்கப்பட்ட நாள் 2019-11-01
- ↑ Marainthirunthu Parkum Marmam Enna Movie Review {2.5/5}: Critic Review of Marainthirunthu Parkum Marmam Enna by Times of India, பார்க்கப்பட்ட நாள் 2019-11-01
- ↑ "Actress – Chennaionline". chennaionline.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
- ↑ "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உருவான விதம்!". Indian Express Tamil. 2018-08-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
- ↑ DelhiSeptember 14, India Today Web Desk New; September 14, 2015UPDATED:; Ist, 2015 12:31. "Aishwarya Dutta to play the lead in a female-centric film". India Today (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Trailer of Dhruvva & Aishwarya Dutta's 'Marainthirunthu Paarkum Marmam Enna' - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.