மஸ்ரூர் கோவில்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மஸ்ரூர் கோவில்கள்
Masrur rockcut temple.jpg
மஸ்ரூரின் இந்து கற்கோவில்கள்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஓத்ரா, பியாஸ் ஆறு பள்ளதாக்கு
புவியியல் ஆள்கூறுகள்32°04′21.2″N 76°08′13.5″E / 32.072556°N 76.137083°E / 32.072556; 76.137083Coordinates: 32°04′21.2″N 76°08′13.5″E / 32.072556°N 76.137083°E / 32.072556; 76.137083
சமயம்இந்து சமயம்
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா மாவட்டம்

மஸ்ரூர் கோயில்கள் (ஆங்கிலம்: Masrur Temples) என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பியாஸ் ஆற்றின் காங்ரா பள்ளத்தாக்கில் உள்ள மஸ்ரூரில் அமைந்துள்ள கற்கோயில்கள் ஆகும். மஸ்ரூர் கோயில்கள் 8 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கற்கலால் வெட்டப்பட்ட இந்து கோவில்களின் வளாகமாகும். [1] கோயில்கள் வடகிழக்கே, இமயமலையின் தௌலாதர் மலை வரம்பை நோக்கி அமைந்துள்ளன. அவை வட இந்திய நகாரா கட்டிடக்கலை பாணியின் ஒரு பதிப்பாகும். இது இந்து மதத்தின் சிவன், விஷ்ணு, தேவி மற்றும் சௌர மரபுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் எஞ்சியிருக்கும் உருவப்படம் பல கடவுள்களில் ஒரு கடவுளை வணங்கும் கோட்பாட்டின் (ஹீனோடிஸ்டிக்) கட்டமைப்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். சிதிலமடைந்த வடிவத்தில் ஒரு பெரிய கோயில் வளாகம் இருந்தாலும், கலைஞர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் மிகவும் லட்சியத் திட்டத்தைக் கொண்டிருந்ததாகவும், வளாகம் முழுமையடையாமல் இருப்பதாகவும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஸ்ரூரின் கோவிலின் சிற்பம் மற்றும் பாறைச் செதுக்குகள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. அவை பெரும்பாலும் பூகம்பங்களிலினால் மிகவும் சேதமடைந்துள்ளன.

கோயில்கள் ஒரு ஒற்றைப் பாறையிலிருந்து ஒரு விமானத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் கோவில் கட்டிடக்கலை குறித்து இந்து நூல்கள் பரிந்துரைத்தபடி புனித நீர் குளம் கட்டப் பட்டுளன. இந்த கோவிலின் வடகிழக்கு, தென்கிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன. அவற்றில் இரண்டு முழுமையற்றவை. நான்காவது நுழைவாயில் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது, ஆனால் பெரும்பாலும் முழுமையடையாததாக இருப்பதாக சான்றுகள் கூறுகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலனித்துவ சகாப்த தொல்பொருள் குழுக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று, ஆனால் தவறான அடையாளம் மற்றும் தவறான அறிக்கைகளுக்கு வழிவகுத்தது மற்றும் புறக்கணிக்கப்பட்டது. முழு வளாகமும் ஒரு சதுர கட்ட்டத்தில் சமச்சீராக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரதான கோயில் சிறிய கோயில்களால் மண்டப வடிவத்தில் சூழப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தின் பிரதான கருவறை மற்ற சதுரங்கள் மற்றும் மண்டபங்களைப் போலவே ஒரு சதுர அமைப்பைக் கொண்டுள்ளது. கோயில் வளாகத்தில் முக்கிய வேத மற்றும் புராண தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் பாறைச் செதுக்குகள் உள்ளன, மேலும் அதன் செதுக்கல்கள் இந்து நூல்களின் புராணக்கதைகளை விவரிக்கின்றன. [1]

இந்த கோயில் வளாகத்தை முதன்முதலில் ஹென்றி ஷட்டில்வொர்த் என்பவர் 1913 ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். [2] 1915 ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வின் ஹரோல்ட் ஹர்கிரீவ்ஸ் அவர்களால் சுயாதீனமாக ஆய்வு செய்யப்பட்டது. கலை வரலாற்றாசிரியரும், இந்திய கோயில் கட்டிடக்கலை நிபுணத்துவம் பெற்ற பேராசிரியருமான மைக்கேல் மீஸ்டர் கருத்துப்படி, மஸ்ரூர் கோயில்கள் ஒரு கோவில் மலை பாணி இந்து கட்டிடக்கலைக்கு எஞ்சியிருக்கும் எடுத்துக்காட்டாகும். இது பூமியையும் அதைச் சுற்றியுள்ள மலைகளையும் உள்ளடக்கியுள்ளது.

இருப்பிடம்

மஸ்ரூர் கோயில்கள் தர்மசாலா- மெக்லியோட் கஞ்சிலிருந்து தென்மேற்கே 45 கிலோமீட்டர் (28 மைல்) தொலைவிலும், வட இந்தியாவில் மலை மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்ராநகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) மேற்கிலும் உள்ளன. இந்த கோயில் பியாஸ் நதி பள்ளத்தாக்கில், இமாயலயத்தின் அடிவாரத்தில், தௌலாதர் மலைத்தொடரின் பனி சிகரங்களை எதிர்கொள்கிறது. இந்த கோயில்கள் சிம்லாவிலிருந்து வடமேற்கே 225 கிலோமீட்டர் (140 மைல்), ஜலந்தருக்கு வடக்கே 150 கிலோமீட்டர் (93 மைல்) மற்றும் பதான்கோட்டிலிருந்து கிழக்கே 85 கிலோமீட்டர் (53 மைல்) தொலைவில் உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் நக்ரோட்டா சூரியன், அருகிலுள்ள விமான நிலையம் தர்மசாலா பன்னாட்டு விமான நிலையமாகும் . தினசரி சேவைகளைக் கொண்ட மிக நெருக்கமான முக்கிய விமான நிலையங்கள் அமிர்தசரஸ் மற்றும் ஜம்மு ஆகும்.

இக்கோயில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலே: முன்புறத்தில் புனித குளத்துடன் சேதமடைந்த அமைப்பு

கற்கோயில்கள் பள்ளத்தாக்கில், இயற்கையாகவே பாறை நிறைந்த ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இதைப்பற்றி 1915 ஆம் ஆண்டில் ஹர்கிரீவ்ஸ் விவரித்துள்ளார், "கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,500 அடி உயரத்தில் நின்று கட்டளையிடுகிறது; ஒரு அற்புதமான காட்சி ஒரு அழகான, நன்கு பாய்ச்சப்பட்ட மற்றும் வளமான பாதையில், அவற்றின் நிலை தொலைதூரமானது என்றாலும், தனித்தன்மை வாய்ந்தது ". [3]

காலம்

கான் கூற்றுப்படி, மஸ்ரூரில் உள்ள இந்து கோவில்கள் மும்பைக்குஅருகிலுள்ள யானைக் குகைகளுக்கும் (1,900 கி.மீ தூரத்தில்), கம்போடியாவில் அங்கோர் வாட் (4,000   கி.மீ தூரத்தில்), மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரத்தின் கற்கோயில்களுக்கும் (2,700 கி.மீ தூரத்தில்) ஒற்றுமையைக் காட்டுகின்றன. இந்த அம்சங்கள் "குப்தர்களின் பாணியின்" செல்வாக்கையும் கொண்டுள்ளன. எனவே அவர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அவற்றின் கட்டுமானத்தை கொண்டு வைக்கிறார். [4] கோயில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் குகைகள் மற்றும் இடிபாடுகள் உள்ளன. இது மஸ்ரூர் பகுதியில் ஒரு காலத்தில் ஒரு பெரிய மனித குடியேற்றத்தைக் கொண்டிருந்தது என்றும் கான் கூறுகிறார்.. [5]

கோயில் குளத்தின் இரண்டு காட்சிகள்.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. 1.0 1.1 Laxman S. Thakur (1996). The Architectural Heritage of Himachal Pradesh: Origin and Development of Temple Styles. Munshiram Manoharlal. pp. 27, 39–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-215-0712-7.
  2. Mulk Raj Anand 1997
  3. Harold Hargreaves, The Monolithic Temples of Masrur, ASI Annual Report Vol 20, pages 39-49
  4. Khan 2014
  5. Khan 2014, ப. 31.

நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=மஸ்ரூர்_கோவில்கள்&oldid=142808" இருந்து மீள்விக்கப்பட்டது