மாயா (ஓவியர்)
| மாயா | |
|---|---|
| பிறப்பு | மகாதேவன் வைக்கம், கேரளம் |
| இறப்பு | சனவரி 22, 2025 (அகவை 98) சென்னை, தமிழ்நாடு |
| அறியப்படுவது | ஓவியர் |
மகாதேவன் என்ற இயற்பெயர் கொண்ட மாயா (இறப்பு: 22 சனவரி 2025) தமிழக ஓவியர்களுள் ஒருவர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட ஓவியர் மாயா என்ற மகாதேவன் கேரளம், வைக்கம் என்ற ஊரில் ராமசுப்பிரமணியம்-பாகீரதி ஆகியோருக்குப் பிறந்தார்.[2] தாத்தா கிருஷ்ண ஐயர் நில உரிமையாளராக இருந்தவர், தந்தை நகரத் திட்டமிடல் நில அளவையாளராகப் பணியாற்றியவர்.[2]
1945-ஆம் ஆண்டில் மாயா 'பேசும்படம்' இதழில் பணியில் சேர்ந்தார். பின்னர் 1955 முதல் 1978 வரை ஆனந்த விகடனில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது ஆனந்த விகடனில் ஆர். மகாதேவன் (தேவன்) ஆசிரியராக இருந்தார். மாயாவின் முதல் ஓவியம் ஆனந்த விகடனில் 1955 சனவரி இதழில் "சாமிக்கண்ணு" என்ற சிறுகதைக்காக மகாதேவன் என்ற பெயரில் வெளியானது.[1] விகடனில் மகாதேவன் என்ற தேவன் பணியாற்றி இருந்தமையால் கையெழுத்து இடாமல் ஓவியங்களை வரைந்து தந்துள்ளார்.[1] 1959 இல் "அவனும் அவளும்" என்ற சிறுகதைக்காக வரைந்த ஓவியத்தில் மாயா எனக் கையெழுத்திட்டார்.[1] பின்னர் மணியனின் "இதயம் பேசுகிறது" இதழில் இணைந்தார்.
"மாயா வெட்டிங் கார்ட்ஸ்’ எனும் ஒரு வாழ்த்து அட்டைகள் நிறுவனத்தையும் இவர் நடத்தி வந்தார். மாயா 'சித்ராலயா’ எனும் பெயரில் ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.
அதற்கு முந்தைய ஆண்டில் ஓவியர் மணியத்தின் நூற்றாண்டின் போது மாயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சிவகுமாரின் அகரம் ஃபவுண்டேஷன் மூலம் மூத்த ஓவியருக்கான விருதும், பணப்பரிசு ஒரு லட்சம் விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இறப்பு
ஓவியர் மாயா 2025 சனவரி 22 அன்று தனது 98 ஆவது அகவையில் காலமானார்.[3][4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 ஆனந்த விகடன் பொக்கிசம் 1959 - 17.02.2010 பக்கம் 77]
- ↑ 2.0 2.1 "அது இனி சாத்தியமில்லை - ஓவியர் மாயா". சூரிய கதிர்: பக். 50-52. ஏப்பிரல் 2012. https://tamilcomicsulagam.blogspot.com/2012/06/comic-cuts-42news-42.html. பார்த்த நாள்: 25 சனவரி 2025.
- ↑ ஓவியர் மாயா காலமானார்!, கல்கி, 23 சனவரி 2025
- ↑ ‘ஓவியர் மாயாவின் அற்புதக் காதல்!’, அந்திமழை, சனவரி 22, 2025