மினி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மினி
மினி மம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மினி

செகர்சு மற்றும் பலர் 2019
மாதிரி இனம்
மினி மம்
செகர்சு மற்றும் பலர் 2019
உயிரியற் பல்வகைமை
3 சிற்றினங்கள்

மினி (Mini-frog) என்பது சிறிய கூர்வாய்த் தவளை சிற்றினமாகும். இவை தென்கிழக்கு மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இவை தாழ் நிலக் காடுகளில் இலைக் குப்பைகளுக்கு மத்தியில் வாழ்கின்றன. மூன்று சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் அறிவியல் ரீதியாக 2019-ல் விவரிக்கப்பட்டுள்ளன. இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றாலும், இவை மிகச் சிறிய வரம்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில் இரண்டு மிக அருகிய இனம் உள்ளன. மினி ஏச்சர் சிற்றினம் குறித்ததரவுகள் போதாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1][2]

இவை சுமார் 8 முதல் 11.5 மி.மீ நீளமுடையது. மினி மம் மற்றும் மினி இசுயுள் உலகின் மிகச்சிறிய தவளை ஆகும். இப்பேரினத்தில் மிகவும் பெரிய தவளை மினி ஏச்சர் மட்டுமே. இது 15 மி.மீ. நீளமுடையது.[1][2][3][4] இவற்றை முன்பு மடகாசுகரில் உள்ள சிறிய தவளைப் பேரினமான இசுடம்ப்பியா உடன் ஒற்றுமைப்படுத்திக் குழப்பமடைந்தனர். இவை அனைத்தும் பழுப்பு நிறத் தவளைகளுடன் உருமறைப்பு கொள்கின்றன.[1]

சிற்றினங்கள்

மினி பேரினத்தில் தற்போது 3 சிற்றினங்கள் உள்ளன. அவை:[1]

  • மினி ஏச்சர் செர்சு மற்றும் பலர்., 2019
  • மினி மம் செர்சு மற்றும் பலர்., 2019
  • மினி இசுகுல் செர்சு மற்றும் பலர்., 2019

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Scherz, Mark D.; Hutter, Carl D.; Rakotoarison, Andolalao; Riemann, Jana C.; Rödel, Mark-Oliver; Ndriantsoa, Serge H.; Glos, Julian; Roberts, Sam Hyde et al. (2019-03-27). "Morphological and ecological convergence at the lower size limit for vertebrates highlighted by five new miniaturised microhylid frog species from three different Madagascan genera" (in en). PLOS ONE 14 (3): e0213314. doi:10.1371/journal.pone.0213314. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:30917162. Bibcode: 2019PLoSO..1413314S. 
  2. 2.0 2.1
"https://tamilar.wiki/w/index.php?title=மினி&oldid=467767" இலிருந்து மீள்விக்கப்பட்டது