மீசலா கீதா
மீசலா கீதா | |
|---|---|
| உறுப்பினர் -ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
| பதவியில் 2014–2019 | |
| முன்னையவர் | பூசபதி அசோக் கஜப்தி இராஜ் |
| தொகுதி | விசயநகரம் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1977-09-17 (அகவை 22–23) |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
மீசலா கீதா (Meesala Geetha)(பிறப்பு செப்டம்பர் 17,1977) ஆந்திராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் விசயநகரம் மாவட்டத்தில் உள்ள விஜயநகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
கீதா விசயநகரத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஜி. சது ராவ். இவர் மீசலா சிறீனிவாச ராவை மணந்தார்.[2] இவர் விசயநகரத்தில் உள்ள எம். ஆர். மகளிர் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றவர். இவர் துர்பு காபு சமூகத்தைச் சேர்ந்தவர்.[3]
அரசியல்
மாவட்ட ஒருங்கிணைப்பாளராக, கீதா 2009ஆம் ஆண்டில் பிரசா ராச்யம் கட்சி வேட்பாளராக விசயநகரச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அரசியலுக்கு அறிமுகமானார். ஆனால் இத்தேர்தலில் தோல்வியடைந்தார். இத்தேர்தலில் அசோக் கஜபதி ராஜு வெற்றி பெற்றார். இவர் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கோலகட்லா வீரபத்ர சுவாமியைத் தோற்கடித்தார். பின்னர், இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து நகராட்சித் தலைவராகப் பணியாற்றினார். ஆனால் பிப்ரவரி 17,2014 அன்று, இவர் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதன் பின்னர் காங்கிரசு கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.[4] 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு காங்கிரசு தலைவர் கோலகட்லா வீரபத்ர சுவாமியை 15,404 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2019ஆம் ஆண்டில், இவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.[5] அசோக் கஜபதி ராஜுவின் மகள் அதிதி கஜபதிக்கு தெலுங்கு தேசம் கட்சியினால் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் சுவாமியிடம் தேர்தலில் தோல்வியடைந்தார்.[6]
மீண்டும், இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயநகரத்திலிருந்து தெலுங்கு தேசம் கட்சியால் நீக்கப்பட்டார். மேலும் இவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.[7][8][9]
முன்னதாக 2023ஆம் ஆண்டில், ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு விடுவிக்கத் தபால் அட்டை பிரச்சாரத்தைத் தொடங்கினார்.[10]
மேற்கோள்கள்
- ↑ Rao, K. Srinivasa (2019-03-10). "Race for TDP ticket hots up in the fort town" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/race-for-tdp-ticket-hots-up-in-the-fort-town/article26489512.ece.
- ↑ "Geetha Meesala(TDP):Constituency- VIZIANAGARAM(VIZIANAGARAM) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-04-15.
- ↑ Gandhi, Koppara (2024-04-14). "Vizianagaram: Kurupam to witness fight between two women candidates". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-04-15.
- ↑ "కాంగ్రెస్ పార్టీకి గీత రాజీనామా". Sakshi (in தெலுங்கு). 2014-02-17. Retrieved 2024-04-15.
- ↑ Chilukuri, Arun (2019-06-26). "మీసాల గీత దారెటు?". www.hmtvlive.com (in தெலுங்கு). Retrieved 2024-04-15.
- ↑ "Ex-TDP MLA revolts against Ashok Gajapathi Raju". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2020-12-21. Retrieved 2024-05-03.
- ↑ Babu, G. Ramesh (2019-03-22). "Women voters to tilt scales in Vizianagaram district". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-04-15.
- ↑ "TDP former MLA Meesala Geeta contesting as independent candidate". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-former-mla-meesala-geeta-contesting-as-independent-candidate/article68084310.ece.
- ↑ "Janasena Glass Symbol: ఏపీ ఎన్నికల్లో టీడీపీ కూటమికి షాక్.. జనసేన గుర్తుతో కొత్త తలనొప్పి". Samayam Telugu (in தெலுங்கு). Retrieved 2024-05-03.
- ↑ "Andhra Pradesh: Former TDP MLA launches postcard campaign in Vizianagaram for release of Chandrababu Naidu" (in en-IN). The Hindu. 2023-09-19. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-former-tdp-mla-launches-postcard-campaign-in-vizianagaram-for-release-of-chandrababu-naidu/article67323114.ece.