முகவை - 1 அல்லது இராம்நாடு - 1 (RMD (R) - 1) எனப்படும் இந்த நெல் வகை, TGR 75R எனும் நெல் இரகத்திலிருந்து நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1] இராம்நாடு, சிவகங்கை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் உள்ள மானாவாரி நெல் சாகுபடி நிலங்களில் பிரதானமாக பயிரியிடப்படும் இந்த நெல் இரகத்தை, TNAU கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமநாதபுரம்[2] பகுதியில் அமைந்துள்ள 'கடற்கரை உப்பு ஆராய்ச்சி மையம்',[3] 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது.[4]

முகவை - 1
RMD (R) - 1
வேளாண் பெயர்
இராம்நாடு - 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
TGR 75R (விதைத் தேர்வு)
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
4000 கிலோ எக்டேர்
வெளியீடு
2006
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கடற்கரை உப்பு ஆராய்ச்சி மையம் இராமநாதபுரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காலம்

குறுகிய கால சாகுபடிக்கு உகந்ததாக உள்ள இது, 100 - 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. செப்டம்பர் - அக்டோபர் பருவத்தில் மானாவாரி நேரடி விதைப்பிற்கு ஏற்றதாக கருதப்படும் இது,[1] வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் உப்புத்தன்மை கொண்ட மானாவாரி சூழலுக்கும் உகந்ததாக கூறப்படுகிறது.[4]

மகசூல்

தண்டு துளைப்பான் மற்றும் இலை சுருட்டுப்புழுவை எதிர்க்கும், பற்றுயிரி தாக்கம், இலை கருகல், குலைநோய் மற்றும் உறை அழுகல் ஆகியவற்றைத் தாங்கும் தன்மையுடையதாக அறியப்படுகிறது. இந்நெல் இரகத்தின் கூலம், அரை குள்ளமாகவும், இதன் அரிசி நீண்ட தடித்த வெள்ளை நிறமாகவும், மேலும் இந்த நெல் வகையின் விளைச்சல், ஒரு எக்டேருக்கு சராசரியாக 4000 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

குறிப்பு

பரமக்குடி - 2; (20.1 %), பரமக்குடி - 3; (21.8 %) மற்றும் மதுரை - 5; (25.5 %) ஆகிய நெல் இரகங்களிலிருந்து குறித்துள்ள விழுக்காட்டை விட கூடுதல் விளைச்சல் தருவதாகவும், பெறப்பட்ட அதிகபட்ச மகசூல் : 5134 கிலோ/எக்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது.[5]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "Paddy Varieties of Tamil Nadu - RMD(R) 1". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2025. Retrieved 2025-10-18.
  2. XX. 6 : TNAU - RESEARCH STATIONS - Pege; 1 - S. No. 6
  3. Coastal Saline Research Centre, Ramanathapuram
  4. 4.0 4.1 "Agricultural Research Station, Ramanathapuram - Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-10-18.
  5. RICE – Year of Release 2006 - RMD (R) 1
"https://tamilar.wiki/w/index.php?title=முகவை_-_1&oldid=470123" இலிருந்து மீள்விக்கப்பட்டது