முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
Jump to navigation
Jump to search
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் [1] [2] [3] [4] என்னும் நூல் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம். அதன் ஆசிரியர் குமர குருபரர். நூலின் பாட்டுடைத்தலைவன் முருகன்; பாடப்பட்டுள்ள அவனது பருவங்கள் பத்து. 17 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் உள்ள மொத்தப் பாடல்கள் 101. இந்த நூலைப் பாடுதற்கு முருகப் பெருமான் 'பொன்பூத்த குடுமி' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
புள்ளிருக்கு வேளூர் வைத்தீசுவரன் கோயிலில் இருக்கும் முருகன் பெயர் முத்துக்குமாரசாமி.
நூலில் உள்ள சிறப்புச் செய்திகள்
- இந்த முருகனை இவர் 'தீராத வினை தீர்த்த தம்பிரான்' என்கிறார். [5]
- இங்குள்ள தீர்த்தம் சித்தாமிர்த தீர்த்தம். [6]
- இதன் விபூதி குண்டத்தில் எழுந்த வெண்சாந்தை எடுத்து உண்பர்.
- சந்தான தீர்க்கத்திலிருந்து மண் எடுத்து உண்பர். [7]
- முத்துக்குமார சுவாமியைக் காக்கும்படி திருமாலை அழைக்கும்போது 'பச்சைப் பசுங்கொண்டலே' என அழைக்கிறார்.
நூலில் உள்ள சில சிறந்த அடிகள்
செங்கீரைப் பருவம்
- திருக்கோல முடன்ஒரு மணக்கோலம் ஆனவன் செங்கீரை ஆடி யருளே
- செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள செங்கீரை ஆடி யருளே.
- குறப்பெண் ...
- தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை ஆடி யருளே
- ஆதி வைத்திய நாத புரிக் குகன் ஆடுக செங்கீரை
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - நூல் - பாடல் மூலம்
- ↑ முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ்; பதிப்பு: ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, காசிமடம், திருப்பனந்தாள், 1952
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 98.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. p. 257.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ இச் செய்தி அப்பர் தேவாரத்தில் முன்பே 'மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீராத நோய் தீர்த்தருள வல்லான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
- ↑ உடலுயிருக்கு அமிழ்தம் போல உணரவுக்கு அமிழ்தம்
- ↑ இந்த மண் இன்றும் மருந்தாகவே பயன்படுகிறது