முத்துத்தி
| முத்துத்தி | |
|---|---|
| படிமம்:Pterocarpus santalinoides MS 4518.jpg | |
| முத்துத்திப் பூக்கள், கொமோவே-லெராபா ஒதுக்ககம், புர்க்கினா ஃபாசோ | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
|
| வரிசை: | Fabales
|
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | Faboideae
|
| சிற்றினம்: | Dalbergieae
|
| பேரினம்: | |
| இனம்: | P. santalinoides
|
| இருசொற் பெயரீடு | |
| Pterocarpus santalinoides தக. | |
| வேறு பெயர்கள் | |
|
[1] | |
முத்துத்தி (Pterocarpus santalinoides) எனப்படுவது நடுத்தர அளவிலான ஒருசிறகித் தாவர இனம் ஒன்றாகும்.[1]
முத்துத்தி மரங்கள் இரண்டு கண்டங்களில் வெகுவாகக் காணப்படுகின்றன. இவை மேற்கு ஆபிரிக்காவின் பெனின், புர்க்கினா ஃபாசோ, கமெரூன், கம்பியா, கானா, கினி, கினி-பிசாவு, ஐவரி கோஸ்ட், லைபீரியா, மாலி, நைஜீரியா, செனெகல், சியேரா லியோனி, தோகோ ஆகிய நாடுகளிலும் தென் அமெரிக்காவின் பிரேசில், கொலம்பியா, பிரெஞ்சு கயானா, கயானா, பரகுவை, பெரு, சுரினாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ, வெனிசுவேலா ஆகிய நாடுகளில் விரவிக் காணப்படுகின்றன.[2]
முத்துத்தி மரம் 9-12 மீ உயரம் வரை வளரும். படை படையான மேற்பட்டையைக் கொண்டிருக்கும் இதன் தண்டு ஒரு மீற்றர் விட்டம் வரை தடிக்கும். இறகுகள் போன்று 5-9 சீறிலைகள் ஒன்று சேர்ந்து இதன் இலையமைப்புக் காணப்படும். இதன் இலைகள் 10-20 செமீ நீளமானவை. செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறம் கலந்த இதன் பூக்கள் கொத்துக் கொத்தாகக் காணப்படும். சிரட்டையுடன் கூடிய இதன் பழம் 3.5-6 செமீ நீளமாக இருக்கும். இதன் பழத்தின் ஒரு பக்கத்தில் பழத்தின் நீளத்தின் முக்கால்வாசி அளவான ஒற்றைச் சிறகு காணப்படும்.[3]
அடிக்குறிப்புக்கள்
- ↑ 1.0 1.1 ILDIS (2005)
- ↑ Prado (1998), ILDIS (2005)
- ↑ World Agroforestry Centre: Pterocarpus santalinoides
மேற்கோள்கள்
- International Legume Database & Information Service (ILDIS) (2005): Pterocarpus santalinoides. Version 10.01, November 2005. Retrieved 2008-NOV-01.
- "Pterocarpus santalinoides". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 1998.
- World Agroforestry Centre (WAC) [2008]: AgroForestryTree Database – Pterocarpus santalinoides. Retrieved 2008-NOV-01.